கலாசாரத்துறை அமைச்சகம்
மகா கும்ப மேளா 2025
Posted On:
04 DEC 2024 5:59PM by PIB Chennai
உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூடலாகக் கொண்டாடப்படும் மகா கும்பமேளா, நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பண்டைய பாரம்பரியத்தின் சங்கமமாகும். இந்து புராணங்களில் வேரூன்றிய இந்தப் புனித திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நடைபெறுகிறது . இது ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக், பிரயாக்ராஜ் என இந்தியாவின் நான்கு மதிப்பிற்குரிய நகரங்களுக்கு இடையே சுற்றிவருகிறது: இவை கங்கை, ஷிப்ரா, கோதாவரி மற்றும் கங்கை, யமுனை, புராண சரஸ்வதி சங்கமம் ஆகியபுனிதமான நதிகளின் கரையில் அமைந்துள்ளன. 2025 ஆம் ஆண்டில், ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை, பிரயாக்ராஜ் மீண்டும் இந்த அற்புதமான கொண்டாட்டத்தின் மையமாக மாறவிருக்கிறது. இது லட்சக் கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களை பக்தி, ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தின் துடிப்பான வெளிப்பாட்டின் ஆழமான காட்சியைக் காண ஈர்க்கவுள்ளது.
இந்த பிரம்மாண்டமான நிகழ்வு மத நடைமுறைகளைக் கடந்து, வானியல், சோதிடம், சமூக-கலாச்சார மரபுகள், ஆன்மீக அறிவொளி ஆகியவற்றின் வளமான கலவையை உள்ளடக்கியது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல் உள்ளிட்ட புனித சடங்குகளில் பங்கேற்க லட்சக் கணக்கான பக்தர்கள், துறவிகள் ஒன்றுகூடுவார்கள். இது தங்களின் பாவங்களைக் கழுவுவதற்கும் ஆன்மீக விடுதலையை நோக்கி வழிநடத்துவதற்குமானது என்று நம்புகிறார்கள். மகா கும்பமேளா இந்தியாவின் ஆழமான வேரூன்றிய பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமின்றி உள்நிலை அமைதி, சுய-உணர்தல் மற்றும் கூட்டு ஒற்றுமைக்கான தேடலையும் வெளிப்படுத்துகிறது.
முக்கிய சடங்குகளும் நடைமுறைகளும்
மகா கும்பமேளா என்பது சடங்குகளின் குவியலாகும். அவை அனைத்திலும் மிக முக்கியமானது குளியல் விழா திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் இந்த புனித நிகழ்வில் லட்சக் கணக்கான யாத்ரீகர்கள் கூடுவாகள். புனித நீரில் மூழ்குவது ஒரு நபரை அனைத்து பாவங்களிலிருந்தும் சுத்தப்படுத்தும் என்ற நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்த சுத்திகரிப்பு செயல் தனிநபர் மற்றும் அவர்களின் மூதாதையர்கள் இருவரையும் மறுபிறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்கும் என்று நம்பப்படுகிறது, இறுதியில் மோட்சம் அல்லது ஆன்மீக விடுதலைக்கு வழிவகுக்கிறது.
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா முழுவதும் புனித நீராடுவது புனிதமாகக் கருதப்பட்டாலும், பௌஷ் பூர்ணிமா (ஜனவரி 13), மகர சங்கராந்தி (ஜனவரி 14) போன்ற சில தேதிகள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த தேதிகளில் புனிதர்கள், அவர்களின் சீடர்கள் மற்றும் பல்வேறு அகாராக்களின் (மத அமைப்புகள்) உறுப்பினர்கள் இடம்பெறும் அற்புதமான ஊர்வலங்களைக் காணலாம். அனைவரும் ஷாஹி ஸ்னான் அல்லது 'ராஜயோகக் நீராடல்' என்று அழைக்கப்படும் பிரமாண்டமான சடங்கில் பங்கேற்கின்றனர். இது மகா கும்பமேளாவின் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கிறது. நிகழ்வின் மைய சிறப்பம்சமாகும்.
ஆற்றங்கரையில் நடக்கும் கங்கா ஆரத்தி விழா பங்கேற்பாளர்களுக்கு மறக்க முடியாத காட்சியாக இருக்கும். இந்த புனித சடங்கின் போது, பூசாரிகள் ஒளிரும் விளக்குகளை ஏந்தி, ஒரு காட்சியை வழங்கி சடங்குகளைச் செய்கிறார்கள். கங்கை ஆரத்தி ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது, இது புனித நதியின் மீது ஆழ்ந்த பக்தியைத் தூண்டுகிறது.
கும்பமேளா 2025-ன் ஈர்ப்புகள்
மகா கும்பமேளாவின் சடங்குகள் மற்றும் நடைமுறைகளுக்கு அப்பால், 2025 ஆம் ஆண்டின் நிகழ்வை இன்னும் குறிப்பிடத்தக்கதாக மாற்றும் பல வசீகரிக்கும் இடங்களும் உள்ளன. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் சங்கமமாக அறியப்படும் பிரயாக்ராஜ், யாத்ரீகர்களுக்கு ஒரு முக்கிய இடமாகும். மூன்று நதிகள் சங்கமிக்கும் புகழ்பெற்ற திரிவேணி சங்கமம், மேளாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்றாகும். இந்த புனித இடம் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை வழங்குகிறது, உலகம் முழுவதிலுமிருந்து லட்சக் கணக்கான பக்தர்களையும் பயணிகளையும் ஈர்க்கிறது.
ஹனுமன் மந்திர், அலோபி தேவி மந்திர் மற்றும் மன்காமேஸ்வர் கோயில் போன்ற பல பழங்கால கோயில்கள் இந்த நகரத்தில் உள்ளன, இவை ஒவ்வொன்றும் பெரும் மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன மற்றும்
நகரத்தின் ஆழமான ஆன்மீக பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன.வரலாற்று ஆர்வலர்களுக்கு அசோகர் தூண் போன்ற குறிப்பிடத்தக்க வரலாற்று அடையாளங்களையும் பிரயாக்ராஜ் கொண்டுள்ளது. நாட்டின் பண்டைய நாகரிகத்தை பிரதிபலிக்கும் கல்வெட்டுகள் உள்ளன. அலகாபாத் பல்கலைக்கழக கட்டிடம், ஸ்வராஜ் பவன் போன்ற கட்டமைப்புகள் நகரத்தின் காலனித்துவ கால கட்டிடக்கலையுடன் இப்பகுதியின் கவர்ச்சியை மேலும் கூட்டுகின்றன. இந்த கட்டிடங்கள் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தின் கட்டிடக்கலை மகத்துவத்தைப் பற்றிய கண்கவர் பார்வையை வழங்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080741
*****
SMB/KPG/DL
(Release ID: 2080884)
Visitor Counter : 39