நித்தி ஆயோக்
நிதி ஆயோக் "வர்த்தக கண்காணிப்பு காலாண்டு" பகுப்பாய்வை புதுதில்லியில் வெளியிடப்பட்டது
Posted On:
04 DEC 2024 2:59PM by PIB Chennai
2024-ம் நிதியாண்டின் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) முதல் காலாண்டிற்கான நாட்டின் வர்த்தக புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்யும் நிதி ஆயோக்கின் சமீபத்திய வெளியீட்டை 2024-ம் ஆண்டு டிசம்பர் 04-ம் தேதி அன்று புதுதில்லியில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் டாக்டர் வி.கே.சரஸ்வத் மற்றும் டாக்டர் அரவிந்த் விர்மானி, பி.வி.ஆர். சுப்பிரமணியம், நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் சுமன் பெரி வெளியிட்டார்; இந்தியாவின் வர்த்தக நிலை, சர்வதேச அளவிலான விநியோகம்-தேவை, துறைசார் செயல்திறன் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்த முழுமையான அறிக்கையை இது வழங்குகிறது.
2024-ம் நிதியாண்டின் முதல் காலாண்டின் போது, நாட்டின்வர்த்தக செயல்திறன் நிலையான மற்றும் மிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. நாட்டின் மொத்த வர்த்தக மதிப்பு 576 பில்லியன் டாலராக இருந்தது, இது ஆண்டொன்றுக்கு 5.45% அதிகரித்துள்ளது. இரும்பு, எஃகு, இயற்கை மற்றும் வளர்ப்பு முத்துக்கள் போன்ற முக்கிய உற்பத்தித் துறைகளின் குறைவான உற்பத்தி காரணமாக வர்த்தக ஏற்றுமதிகள் குறைந்துள்ளன. மறுபுறம், விமானம், விண்கலம், கனிம எரிபொருள்கள் மற்றும் தாவர எண்ணெய்கள் உள்ளிட்ட உயர் மதிப்பு கொண்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. சேவை துறையின் ஏற்றுமதி அதிகரித்தது. இதூ அத்துறைக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.
நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் அரவிந்த் விர்மானி, விரிவான வர்த்தக வெளியீட்டை வெளியிட்டதற்காக ஒட்டுமொத்த குழுவையும் பாராட்டினார். நாட்டின் வளர்ந்து வரும் வர்த்தக நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கான முக்கிய கருவியாக இந்த ஆவணம் செயல்படும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம், தரவுகளின் அடிப்படையிலான அணுகுமுறைகள் மற்றும் அதற்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் இந்தியாவின் வர்த்தக நிலை குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்குவதன் மூலம், இந்த வெளியீடு ஆதார அடிப்படையிலான கொள்கைகளை வகுக்க உதவிடும் என்று கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வர்த்தக திறனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அத்துறையில் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாறிவரும் உலகளாவிய வர்த்தக சூழலை கருத்தில் கொண்டு நீடித்த வளர்ச்சிக்கு இது வித்திடுகிறது.
-----
TS/SV/RR/KV/DL
(Release ID: 2080823)
Visitor Counter : 21