உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தானியங்கி கைரேகை அடையாள முறை (NAFIS)

Posted On: 04 DEC 2024 4:44PM by PIB Chennai

தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது (NCRB) தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு (NAFIS) திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இது அனைத்து மாவட்டங்கள், காவல் ஆணையரகம், மாநில கைரேகை அலுவலகம், மத்திய கைரேகை அலுவலகம், மத்திய சட்ட அமலாக்க முகமைகள் ஆகியவற்றுக்கு  குற்றவியல் கைரேகைகளின் தேசிய களஞ்சியத்தை நிறுவுவதற்கான உபகரணங்களை வழங்குகிறது.

அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கைரேகை அடையாள அமைப்பு தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பின் அமலாக்கம் 31.10.2024 அன்றைய நிலவரப்படி 1.06 கோடி குற்றவியல் கைரேகை பதிவுகளைக் கொண்ட தேசிய களஞ்சியத்தை உருவாக்க வழிவகுத்தது, இது அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளது. இது பயனுள்ள, விரைவான விசாரணைகளுக்கு உதவுகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.

***

TS/PLM/AG/DL


(Release ID: 2080802) Visitor Counter : 50