சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள்

प्रविष्टि तिथि: 04 DEC 2024 1:55PM by PIB Chennai

 

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 6 சிறுபான்மை சமூகங்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆராய்ச்சி, அமைச்சகத்தின் விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ் கண்காணிப்பு, மதிப்பீடு ஆகியவற்றை மேற்கொள்ள பல்தட ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், பண்பலை அலைவரிசைகள் வாயிலாக சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்துறைப் பணி விளக்க பிரச்சாரங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள்  குறித்த சிறிய புத்தகங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் இந்தி, ஆங்கிலம், உருது மற்றும் பிற பிராந்திய மொழிகளில் வெளியிடப்படுகின்றன. பொதுமக்களை, குறிப்பாக சிறுபான்மையின சமூகத்தினரை நேரடியாகச் சென்றடையும் வகையிலும், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பல்வேறு இடங்களில் 'கைவினை பொருட்களின் கண்காட்சி' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி மேலும் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக திட்ட அமலாக்க முகமைகள் (PIAs) மூலம் பட்டறைகள் / கருத்தரங்குகளை நடத்துவதற்கும் அமைச்சகம் ஆதரவளிக்கிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/SV/RR/KV

 


(रिलीज़ आईडी: 2080589) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi