கூட்டுறவு அமைச்சகம்
கூட்டுறவு சங்கங்களுக்கான தேசிய அளவிலான தரவுத் தொகுப்பு
Posted On:
03 DEC 2024 3:43PM by PIB Chennai
மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் ஆதரவுடன், மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தால் விரிவான தேசிய கூட்டுறவு தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தரவுகளும் தரவுத்தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.
தேசிய கூட்டுறவு தரவுத்தளம் மூன்று கட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரியில் நிறைவடைந்த முதல் கட்டத்தில்,மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் ஏஐசிடிஇ-ன் 500 உள்ளகப் பயிற்சியாளர்கள் உதவியுடன் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளத்தில் தொடர்பான சுமார் 2.64 லட்சம் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் வரைபடமாக்கப்பட்டன. இரண்டாம் கட்டம், தேசிய கூட்டுறவு சங்கங்கள் / கூட்டமைப்புகள் மற்றும் மாநில மற்றும் மாவட்ட நிலையிலான அவற்றின் தொடர்புகளை வரைபடமாக்குதலைக் கொண்டிருந்தது. பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டமைப்புகளிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு இப்பணி மேற்கொள்ளப்பட்டது. 2023 மே மாதத்தில் தொடங்கப்பட்ட மூன்றாம் கட்டத்தில், தரவுத்தளம் மற்ற துறைகளில் உள்ள 5.3 லட்சத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
தேசிய கூட்டுறவு தரவுத்தளம் இணையதளத்தின்படி, 28.11.2024 தேதியிட்ட நிலவரப்படி கூட்டுறவு சங்கங்களின் விவரங்கள், மாநில வாரியாக மற்றும் துறை வாரியாக முறையே இணைப்பு-1 மற்றும் இணைப்பு-2-ல் இணைக்கப்பட்டுள்ளன.
தரவுத்தளம் இப்போது URL https://cooperatives.gov.in-ல் செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080082
----
TS/IR/KPG/KR
(Release ID: 2080239)
Visitor Counter : 35