சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, 33 முன்மாதிரியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்குகிறார்

Posted On: 02 DEC 2024 8:48PM by PIB Chennai

2024, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தைக் குறிக்கும் வகையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான மதிப்புமிக்க தேசிய விருதுகளை புதுதில்லியில் 03.12.2024 அன்று வழங்கவிருக்கிறது. குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 33 முன்மாதிரியான தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு தேசிய விருதுகளை வழங்குவார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு பி.எல்.வர்மா ஆகியோர் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகள் துறையில் தனித்துவமான அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளை வெளிப்படுத்திய தனிநபர்கள், நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநில / மாவட்ட / யூனியன் பிரதேச நிர்வாகங்களை கௌரவிப்பதற்காக தேசிய விருதுகளை மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை வழங்குகிறது. இந்த நிகழ்வு மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் மற்றும் வெற்றியின் கதைகளைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், உண்மையான முன்னேற்றத்தின் தூண்களாக அதிகாரமளித்தல், உள்ளடக்கம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் செய்தியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தேசிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் 2024, ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 15, வரை www.awards.gov.in  என்ற தளம் வழியாக வரவேற்கப்பட்டன. தனிநபர் பிரிவுகளில் 1,704 விண்ணப்பங்கள் மற்றும் நிறுவன பிரிவுகளில் 182 என மொத்தம் 1,886 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 2024-ஐ முன்னிட்டு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 16 உருமாற்ற முன்முயற்சிகளையும் தொடங்கி வைப்பார். இந்த முயற்சிகள் உள்ளடக்கம், புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன, இது அதிகாரமளித்தலுக்கான துறையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079947   

***

TS/BR/KR


(Release ID: 2080018) Visitor Counter : 27