சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் வனப் பரப்பு அளவு

Posted On: 02 DEC 2024 4:09PM by PIB Chennai

வனத்துறை அமைச்சகத்தின் கீழ் டேராடூனில் உள்ள இந்திய வன ஆய்வு நிறுவனம் (எஃப்எஸ்ஐ) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வனப்பகுதி மதிப்பீட்டை மேற்கொள்கிறது. இந்திய வனப் பரப்பு நிலை தொடர்பான சமீபத்திய அறிக்கை 2021-ன் படி, நாட்டின் மொத்த வனப்பகுதி 7,13,789 சதுர கிலோமீட்டர் ஆகும். இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 21.71 சதவீதம் ஆகும்.

 2017-ம் ஆண்டு மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது 2021-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி வனம், மரங்களின் பரப்பு 7449 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளது.

வன (பாதுகாப்பு) சட்டம்- 1980, ஆகஸ்ட் 2023-ல் திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட விதிகள் 1 டிசம்பர் 2023 முதல் நடைமுறைக்கு வந்தன. காடுகளின் பாதுகாப்பு, மேலாண்மை, வனப்பரப்பு மீட்டெடுப்பை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான வளர்ச்சியை ஆதரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்தல், காடுகள் தொடர்பான கலாச்சார, பாரம்பரிய மதிப்புகளைப் பாதுகாத்தல், கார்பன் நடுநிலைமையை மேம்படுத்தும் போது பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றிற்காக இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்த நிலப்பரப்பு 1,30,060 சதுர கிலோ மீட்டராகும். 2017-ம் ஆண்டு நிலவரப்படி மாநிலத்தின் வனப்பரப்பு 26,281 சதுர கிலோ மீட்டராகவும், 2019-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி 26,364 சதுர கிலோ மீட்டராகவும், 2021-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி 26,419 கிலோ மீட்டராகவும் இருந்தது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

****

(Release ID: 2079737)

TS/PLM/DL


(Release ID: 2079906) Visitor Counter : 38