சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இபிஆர் வழிகாட்டு நெறிமுறைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
02 DEC 2024 4:07PM by PIB Chennai
நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பின் கீழ் வரும் பல்வேறு கழிவு பொருட்களுக்கான பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக உரிமையாளர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
கழிவுப் பொருட்கள்
|
இபிஆர்-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட தயாரிப்பாளர்கள்
|
|
பிளாஸ்டிக் பேக்கேஜிங் கழிவுகள்
|
44,659
|
|
மின்னணு கழிவுகள்
|
7050
|
|
பேட்டரி கழிவு
|
2933
|
|
வீணாகும் டயர்கள்
|
179
|
|
பயன்படுத்திய எண்ணெய்
|
8
|
பிளாஸ்டிக் பேக்கேஜிங், மின்னணுக் கழிவுகள், மின்கலக் கழிவுகள், வீணாகும் டயர் மற்றும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் கழிவுகள், மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மற்றும் மாசு கட்டுப்பாடு குழுக்களால் இபிஆர் கீழ் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு சரிபார்க்கப்படுகின்றன. இபிஆர் சான்றிதழ்கள் அந்தந்த மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் இபிஆர் தளங்களில் மறுசுழற்சி செய்பவர்களால் பதிவேற்றப்படுகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2079733)
TS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2079771)
வருகையாளர் எண்ணிக்கை : 74