பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் குடிமைப்பணி அதிகாரிகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கான முதலாவது திறன் மேம்பாட்டுத் திட்டம்

Posted On: 30 NOV 2024 12:29PM by PIB Chennai

 

சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம் (NCGG) தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளைச் சேர்ந்த குடிமைப்பணி அதிகாரிகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கான முதலாவது திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முதலாவது திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 2024 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 -ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்ற இரண்டு வார கால நிகழ்ச்சி முசோரி மற்றும் புது தில்லியில் நடைபெற்றது. இலங்கை, ஓமான், தான்சானியா, கென்யா, சீஷெல்ஸ், மலேசியா, கம்போடியா, மாலத்தீவு மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய அமைச்சகங்களைச் சேர்ந்த 30 மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களுக்கிடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும், சிறந்த நிர்வாக நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும்புதுமையான அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்கும் ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னணு-ஆளுமை, நிலையான வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் இந்த திட்டம் கவனம் செலுத்தியது, இது நிர்வாக நடைமுறைகளில்  சிறந்து விளங்குவதற்கான சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின்   உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பேசிய, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் சுரேந்திரகுமார் பாக்டே, பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி, மின்னணு நிர்வாக நடைமுறைகளில் முன்னோடியாகத் திகழும் இந்தியாவின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றத்திற்கு வழிவகுத்த "குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்" என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார். கழிவு மேலாண்மை போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் டாக்டர் பாக்டே வலியுறுத்தினார், இந்த அம்சங்களில் பயனுள்ள வழிமுறைகள் நீண்டகால அடிப்படையிலான நேர்மறையான சூழல் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அந்தந்த நாடுகளைச் சார்ந்த விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன. அதில் தங்கள் நாடுகளில் உள்ள நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் மேம்பாட்டு உத்திகளை காட்சிப்படுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079317

*****

VS/KV

 

 

 

 


(Release ID: 2079328) Visitor Counter : 26