சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
யூ வின் போர்ட்டல் குறித்த அண்மைத் தகவல்
தமிழ்நாட்டில், 2024, நவம்பர் 25 நிலவரப்படி 15,59,860 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்; 28,05,744 டோஸ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன
Posted On:
29 NOV 2024 3:59PM by PIB Chennai
யூ வின் என்பது தடுக்கக்கூடிய 12 நோய்களுக்கு எதிராக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு (பிறப்பு முதல் 16 வயது வரை) உயிர்காக்கும் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதாகும். மேலும் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசி சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு டிஜிட்டல் தளமாகும். அனைவருக்கும் தடுப்பு மருந்து திட்டத்தின் ஆண்டு இலக்கு சுமார் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 2.6 கோடி குழந்தைகள். 'எந்த நேரத்திலும் அணுகுதல் ', 'எங்கிருந்தும் அணுகுதல்' என்பது இதன் முக்கிய அம்சங்களாகும்.
யூ வின் ஆரம்பகட்ட முன்னோட்ட அமலாக்கம் 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. 2024, நவம்பர் 25 நிலவரப்படி, 7.43 கோடி பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், 1.26 கோடி தடுப்பூசி அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 27.77 கோடி தடுப்பூசி/தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுள்ளது. இவை யூ வின் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2024, நவம்பர் 25 நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 15,59,860 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். 28,05,744 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 76,663 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். 2,91,471 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
யூ வின் தளமானது, பதிவை உறுதிசெய்வதற்கான தானியங்கி குறுஞ்செய்திகளை (எஸ்எம்எஸ்) அனுப்புகிறது. செலுத்தப்பட்ட தடுப்பூசி தவணைகளை கணக்கில் எடுத்துக் கொள்கின்றது. மற்றும் வரவிருக்கும் டோஸ்களுக்கான நினைவூட்டல் எஸ்எம்எஸ் (தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு) அனுப்பப்படுகின்றன.
யூ வின் தளத்தின் ஆஃப்லைன் பயன்முறையானது, இணைய இணைப்பு இல்லாத பகுதிகளில் தடுப்பூசி சேவைகளைப் பதிவுசெய்ய சுகாதாரப் பணியாளர்களை அனுமதிக்கிறது. நாடு தழுவிய சமூக ஊடகப் பிரச்சாரத்தின் மூலம் பொது மக்களிடையே குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079025
****
TS/SMB/RR/DL
(Release ID: 2079147)
Visitor Counter : 17