குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் நவம்பர் 30-ம் தேதி அன்று தோய்முக் & இட்டாநகர் (அருணாச்சலப் பிரதேசம்) பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 NOV 2024 2:16PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், நவம்பர் 30-ம் தேதி அன்று அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தோய்முக் & இட்டாநகரில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தமது பயணத்தின் போது, தோய்முக்கில் குடியரசு துணைத்தலைவர் ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில், தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

குடியரசு துணைத் தலைவர் தமது பயணத்தின் போது இட்டாநகரில் உள்ள அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவையின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றுவார்.

***

(Release ID: 2078951)

TS/PKV/AG/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2078983) வருகையாளர் எண்ணிக்கை : 53
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Assamese