தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தைத் தொழிலாளர் கண்டறிதல் முறை

Posted On: 28 NOV 2024 5:01PM by PIB Chennai

குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1986-ஐ திறம்பட அமல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, 'குழந்தைத் தொழிலாளர் இல்லாத நிலைமைக்கு பலன் தரும் அமலாக்கத் தளம் ' (பென்சில்-PENCiL)என்ற இணைய தளத்தை அரசு உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளம், மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட திட்ட சங்கங்கள், குழந்தை தொழிலாளர் கண்டறிதல் முறை மற்றும் புகார் அமைப்பு ஆகிய ஐந்து கூறுகளைக் கொண்டுள்ளது.

இந்த சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, மாவட்ட பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், புலம்பெயர்ந்தோர், சிறுமி மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்கு அந்தந்த மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிடும் மாதிரி மாநில செயல் திட்டத்தையும் அமைச்சகம் வடிவமைத்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

---

TS/IR/KPG/DL


(Release ID: 2078734) Visitor Counter : 7


Read this release in: English , Urdu