தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 9

காஷ்மீரின் ரௌஃப் நடனம் முதல் தமிழ்நாட்டின் கரகாட்டம் வரை: சர்வதேச திரைப்பட விழாவில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைகளை ஒன்றிணைக்கும் மத்திய தகவல் தொடர்பு பணியகம்

  • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மக்கள் தொடர்பகம் (சிபிசி), கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்று வரும் 55வது சர்வதேச திரைப்பட விழாவில் இசை மற்றும் நாடகப் பிரிவின் கலை  நிகழ்ச்சிகளை நடத்தியது. இந்த கலைநிகழ்ச்சிகள் நாட்டின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன.
  • நாட்டின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்புற, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நடனமும் ஒரு தனித்துவமிக்க கதையைச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. அந்தந்த பகுதியைச் சேர்ந்த பழக்கவழக்கங்கள், சடங்குகள், ஆன்மீகம் போன்ற பல்வேறு அம்சங்களை இந்த நடனங்கள் பறைசாற்றுகிறது. இத்தகைய நடன நிகழ்ச்சிகள் திரைப்பட ஆர்வலர்களுக்கு கண்கவர் காட்சியாகவும் கலை அனுபவமாகவும்  அமைந்துள்ளது.
  • நாடு முழுவதிலுமிருந்து 110-க்கும் மேற்பட்ட திறமையான கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
  • கவுகாத்தி, ஹைதராபாத், புவனேஸ்வர், ஜம்மு, சென்னை, இமாச்சலப் பிரதேசம், பெங்களூரு, புனே மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மத்திய மக்கள் தொடர்பகத்தின் மண்டல அலுவலகங்கள் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன.
  • •     அசாமில் இருந்து சத்ரியா, போர்தால், தியோதானி மற்றும்பிஹு நடனமும், குசாடி தெலுங்கானாவிலிருந்தும், ஒடிசாவிலிருந்து ஒடிசி நடனமும் இடம் பெற்றன.
  • •     காஷ்மீரைச் சேர்ந்த ரௌஃப், தமிழ்நாட்டிலிருந்து காரகாட்டம்– கேரளாவில் இருந்து மோகினியாட்டம் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து சிர்மோர் நதி, தக்யாலி மற்றும்தீப்டான்ஸ் நடனங்களும் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றன.
  • •     கர்நாடகாவிலிருந்து ஜோகதி, தீபம் நடனம் இடம் பெற்றது.
  • •     மகாராஷ்டிராவிலிருந்து லாவ்னி மற்றும்முஜ்ரா நடனமும், ராஜஸ்தானிலிருந்து செரி மற்றும் கல்பேலியா நடனமும் பீகாரில் இருந்து ஜிஜியா நடனமும் இடம் பெற்றன.

***

(Release ID: 2078345)
TS/SV/RR/KR

iffi reel

(Release ID: 2078472) Visitor Counter : 9