உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறிய அளவிலான உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு நிதியுதவி

Posted On: 28 NOV 2024 1:49PM by PIB Chennai

நாட்டில் உள்ள சிறிய அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு நிதி, தொழில்நுட்பம், வர்த்தக ஆதரவு ஆகியவற்றை வழங்குவதற்காக மத்திய அரசின் நிதியுதவியுடன் "பிரதமரின் சிறு அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தை" மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம் 2020-21 முதல் 2025-26 வரை ஐந்தாண்டு காலத்திற்கு 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்புசாரா பிரிவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு நிறுவனங்களின் போட்டித்தன்மையை அதிகரிப்பது, இத் துறையின் செயல்பாடுகளை முறைப்படுத்தி ஊக்குவிப்பது ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இடுபொருட்கள் கொள்முதல், பொது சேவைகளைப் பெறுதல், உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. வேளாண் உற்பத்தி, மூலப்பொருள் இருப்பு, அழுகும் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் ஒரு மாவட்டம், ஒரு பொருள் அடையாளம் காணப்பட்டு அதனை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

உணவு பதப்படுத்துதல் துறையில் தேவை அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஊக்குவிப்பதற்கும், உற்பத்திப் பொருள் மற்றும் செயல்முறை மேம்பாடு, உபகரணங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சேமிப்பு ஆகியவற்றிற்காக பல்வேறு நிறுவனங்கள் / பல்கலைக் கழகங்கள், பொது நிதியுதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களுக்கு உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் மானிய  நிதி உதவியை அளிக்கிறது.

***

(Release ID: 2078344)
TS/SV/RR/KR


(Release ID: 2078466) Visitor Counter : 5


Read this release in: English , Urdu , Hindi , Manipuri