தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘தாள்’ திரைப்படத்தின் 25 ஆண்டுகளை முன்னிட்டு ஐ.எஃப்.எஃப்.ஐ-இல் சிறப்பு திரையிடல்
கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (.எஃப்.எஃப்.ஐ) 'தாள்' திரைப்படத்தின் 25-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து இயக்குநர் சுபாஷ் கய், பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் நடிகை ஜிவிதா சர்மா உள்ளிட்ட 'தாள்' குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைக் கருத்தில் கொண்டு, இந்தப் படத்தைப் பார்க்காத ஒருவரை காண்பது அரிது என்று இயக்குநர் சுபாஷ் கய் கூறினார்.
"சில படங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளன, அவை பார்வையாளர்களுடன் எதிரொலிக்கின்றன. நீங்கள் சோர்வாக உணரும்போது, தாள் போன்ற ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்புவீர்கள்" என்று படத்தின் முன்னணி நடிகர் அனில் கபூர் ஒரு காணொலி செய்தியில் கூறினார்.
"சுபாஷ் கய் பல மகத்தான படைப்புகளை உருவாக்கிய தொழில்துறையின் மாஸ்டர் ஷோமேன். பெரிய திரையைப் பற்றிய அவரது பார்வையைப் புரிந்துகொள்ள நாம் அனைவரும் தாள் படத்தைப் பார்க்க வேண்டும்" என்று படத்தில் நடித்த சவுரப் சுக்லா காணொலி செய்தி மூலம் கூறினார்.
வெரைட்டியின் டாப் 20 பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் நுழைந்த முதல் இந்திய திரைப்படம், 'தாள்'. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க சம்மதிக்க வைத்தது பற்றி சுபாஷ் கய் விவரித்தார். திரைப்படத்திற்கான தனது பார்வையைப் பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளை அவர் பகிர்ந்து கொண்டார். சிறுமியின் முக்கிய கதாபாத்திரம் படம் முடிவடையும் வரை 7 கட்ட வளர்ச்சியைக் கடந்து செல்கிறது, இது இந்தப் படத்துடன் தொடர்புடைய 7 'ஸ்வரங்கள்' (இசைக் குறிப்புகள்) என்பதைக் குறிக்கிறது என்பதை அவர் விளக்கினார்.
"இந்திய ரசிகர்களை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் பாட முயற்சித்தேன்" என்று பிரபல பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி, 'தாள்' படத்திற்காக அவர் பாடிய சூப்பர்ஹிட் பாடல்கள் பற்றி பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078164
***
(Release ID: 2078164)
AD/BR/KR
(Release ID: 2078391)
Visitor Counter : 22