தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

ஐ.எஃப்.எஃப்.ஐ: 'ஃபார் ராணா' மற்றும் 'தி நியூ இயர் தட் நெவர் கேம்' ஆகிய திரைப்படங்கள் தன்னை அறிதல், தியாகம், அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மையின் மோசமான தாக்கத்தை ஆராய்கின்றன

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) இரண்டு முத்தான திரைப்படங்களை வெளியிட்டது. அவை, 'ஐ.சி.எஃப்.டி யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்குப்' போட்டியிடும் ஈரானிய படைப்பான 'ஃபார் ராணா' மற்றும் 'சர்வதேச போட்டி' பிரிவில் போட்டியிடும் ருமேனிய திரைப்படமான 'தி நியூ இயர் தட் நெவர் கம்' ஆகும். தொலைநோக்குப் பார்வை கொண்ட  இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் படங்கள் சாதாரண கதைசொல்லலின் எல்லைகளுக்கு அப்பால் பயணிக்கின்றன. தன்னை அறிதல், தியாகம், அடக்குமுறை மற்றும் கொடுங்கோன்மையின் வேதனை ஆகியவற்றை ஆராயும் ஆழமான பயணங்களை இத்திரைப்படங்கள் தொடங்குகின்றன.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பேசிய 'ஃபார் ராணா' படத்தின் இயக்குநர் இமான் யாஸ்தி, நடுத்தர வர்க்கத்தின் போராட்டங்கள், பலவீனங்கள் மற்றும் சமூக தாக்கத்தை இந்தப் படம் பிரதிபலிக்கிறது என்று கூறினார். ஐ.எஃப்.எஃப்.ஐ.யில் அவரது அனுபவத்தைப் பற்றி கேட்டபோது, இங்குள்ள பார்வையாளர்கள் உண்மையிலேயே சினிமாவை மதிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார், இந்திய மக்கள் திரைப்படங்கள் மீது காட்டும் உற்சாகத்தையும்  பிணைப்பையும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், 'தி நியூ இயர் தட் நெவர் கேம்' படத்தின் இயக்குநர் போக்டன் முரேசானு, தனது திரைப்படத்தை ருமேனிய புரட்சியின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு சோக நகைச்சுவைக் கதை என்று விவரித்தார்.  இது அந்த நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட சில தொலைக்காட்சி புரட்சிகளில் ஒன்றாகும். கடந்த காலத்தின் நாடகத்தை உருவாக்கும் போது உள்ள சவால்களை முரேசனு குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் விரிவான ஆராய்ச்சி செய்ய வேண்டியதன் அவசியம் உட்பட, வரலாற்றின் முரண்நகையால் அவர் ஆர்வம் கொண்டிருந்ததாகவும், இது இந்தப் படத்தை உருவாக்க அவரைத் தூண்டியதாகவும் இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078117

  

***

TS/BR/KR

iffi reel

(Release ID: 2078303) Visitor Counter : 19