சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 'ஒரே ஆரோக்கியம்' அரங்கு இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2024-ல் 'சிறப்பு பாராட்டு பதக்கத்தை' பெற்றது

प्रविष्टि तिथि: 27 NOV 2024 6:40PM by PIB Chennai

பாரத மண்டபத்தில் நடைபெற்ற 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்  'ஒரே ஆரோக்கியம்' என்ற தலைப்பில் அமைத்த சுகாதார அரங்கம் சிறப்பு பாராட்டு பதக்கத்தைப் பெற்றது.

இந்த அங்கீகாரம், அரங்கின் புதுமையான வடிவமைப்பு, இந்தியாவின் சுகாதார சாதனைகள் மற்றும் முன்முயற்சிகளின் பலன்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் விளக்கக்காட்சிக்கானது. இந்த ஆண்டு அரங்கு  'ஒரே ஆரோக்கியம்' அணுகுமுறையில் கவனம் செலுத்தியது. இது மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் ஆரோக்கியம் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை வலியுறுத்தும் ஒரு முழுமையான கட்டமைப்பாக இருந்தது.

இந்த அரங்கில் 39 சிறப்பான மற்றும் தகவல் தரும் பிரிவுகள்  இடம்பெற்று இருந்தன. இவை  சுகாதாரப் பராமரிப்பில் அமைச்சகத்தின் முக்கிய சாதனைகளை எடுத்துக்காட்டின.14 நாட்களில், இந்த அரங்கு  அற்புதமான  அனுபவத்தை வழங்கியது, 'ஒரே ஆரோக்கியம்' அணுகுமுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் நோய் வராமல் முன்கூட்டியே தடுத்தல், ஆரோக்கிய மேம்பாடு, குணப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. இலவச ஆலோசனை, நோயறிதல் மற்றும் ஆலோசனைகளையும் இந்த அரங்கு வழங்கியது, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சுகாதாரத்தை அணுகக்கூடியதாக ஆக்கியது.

இந்தியாவின் சுகாதார இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யும் 'ஒரே ஆரோக்கியம்' தொலைநோக்கு பார்வை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

******

SMB/KV/DL


(रिलीज़ आईडी: 2078171) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi