தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
55-வது சர்வதேச திரைப்பட விழாவில் 'தபன் சின்ஹா – நூற்றாண்டு அமர்வு – தி ஸ்பெக்ட்ரம் அண்ட் தி சோல்' என்ற தலைப்பிலான குழு விவாதம் ஜாம்பவானின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது
புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் தபன் சின்ஹாவின் வாழ்க்கை மற்றும் படைப்புகளின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவாவின் பனாஜியில் உள்ள கலா அகாடமியில் 55- வது ஐ.எஃப்.எஃப்.ஐயில் "தபன் சின்ஹா-நூற்றாண்டு அமர்வு-ஸ்பெக்ட்ரம் மற்றும் ஆன்மா" என்ற குழு விவாதம் இன்று காலை நடைபெற்றது.
மூத்த நடிகை திருமதி ஷர்மிளா தாகூர், திரு சின்ஹாவிடம் இருந்த மனிதப் பண்புகளை சுட்டிக்காட்டினார். 'அவர் குறைந்த வார்த்தைகளே பேசக்கூடியவர்; நன்றாகக் கேட்பவர்' என்றார். தொடர்ந்து பேசிய அவர், "சொல்வதற்கு எதுவும் இல்லாத மக்கள் இருக்கிறார்கள், அதனால்தான் அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். என்றாலும் தபன் பாபுவிடம் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. தபன் சின்ஹாவின் எழுத்துக்களில் ரவீந்திரநாத் தாகூரின் ஆழமான தாக்கம் குறித்து திருமதி தாகூர் விரிவாக விவாதித்தார்.
55-வது சர்வதேச திரைப்பட விழாவின் விழா இயக்குநர் திரு சேகர் கபூர் நான்கு ஜாம்பவான்களின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078099
***
MM/RS/DL
(Release ID: 2078170)
Visitor Counter : 8