தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சர்வதேச திரைப்பட விழாவில் ஐசிஎஃப்டி – யுனெஸ்கோ காந்தி பதக்கம் பெற்றவர்களாகிய நாங்கள், அமைதியின் தூதர்கள்: 2017 காந்தி பதக்கம் பெற்ற மனோஜ் மோகன் கடம்
சினிமா சிறப்பையும், காந்திய விழுமியங்களையும் கௌரவிக்கும் பாரம்பரியத்தைத் தொடரும் வகையில், ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ காந்தி பதக்கம் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐ.எஃப்.எஃப்.ஐ) வழங்கப்படும். அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையைக் கொண்டாடும் இந்த மதிப்புமிக்க விருது யுனெஸ்கோ மற்றும் திரைப்படம், தொலைக்காட்சி, ஆடியோ-காட்சி தகவல்தொடர்புக்கான சர்வதேச கவுன்சில் (ஐ.சி.எஃப்.டி) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பாகும். ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்கான நடுவர் குழு மற்றும் பிரதிநிதிகள் இன்று கோவாவில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
2015-ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ காந்தி பதக்கம், மகாத்மா காந்தியின் கொள்கைகளை பிரதிபலிக்கும் திரைப்படங்களுக்கான மதிப்புமிக்க பாராட்டாக மாறியுள்ளது. இந்த ஆண்டு, பல்வேறு மொழிகள், வகைகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த 10 சிறந்த திரைப்படங்கள், பார்வையாளர்களை, குறிப்பாக இளைஞர்களை அமைதி, சமூக நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற கருப்பொருள்களுடன் ஊக்குவிப்பதற்கும் ஈடுபடுத்துவதற்கும்,பட்டியலிடப்பட்டுள்ளன.
தேர்வு செயல்முறை பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட மதிப்புமிக்க நடுவர் குழுவால் மேற்பார்வையிடப்பட்டுள்ளது:
இசபெல்லா டேனல், FIPRESCI- சர்வதேச திரைப்பட விமர்சகர்கள் கூட்டமைப்பின் கௌரவத் தலைவர்,
செர்ஜ் மைக்கேல், CICT-ICFT-ன் துணைத் தலைவர்,
யுனெஸ்கோவின் கலாச்சாரத் துறை திட்டத்தின் முன்னாள் தலைவர் மரியா கிறிஸ்டினா இக்லெசியாஸ்,
அல்ஜியர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் கலை இயக்குநர் டாக்டர் அஹ்மத் பெட்ஜாவி,
Xueyuan Hun, படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புக்கான தளத்தின் இயக்குநர், CICT-ICFT இளைஞர் கிளை.
நடுவர் குழு திரைப்படங்களை அவற்றின் நெறிமுறை ஆழம், கலை சிறப்பு மற்றும் கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடலை வளர்க்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078040
***
MM/RS/DL
(Release ID: 2078129)