எஃகுத்துறை அமைச்சகம்
தரமான எஃகு மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறதா அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறதா என்பதை எஃகு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து இந்திய தர நிர்ணய நிறுவனம் உறுதி செய்கிறது
Posted On:
27 NOV 2024 5:02PM by PIB Chennai
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் எஃகு இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் எஃகு இறக்குமதி 3.329 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், நடப்பாண்டின் இறக்குமதி 41.3% அதிகரித்து 4.735 மில்லியன் டன்னாக உள்ளது. நாட்டின் மொத்த நுகர்வுடன் ஒப்பிடும்போது, எஃகு இறக்குமதியின் ஒட்டுமொத்த அளவு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்ற போதிலும், குறைவான விலையில் இறக்குமதி செய்யப்படுவது உள்நாட்டு எஃகு விலைகளை மந்தநிலைக்கு கொண்டு செல்வதுடன் பெரிய மற்றும் சிறிய எஃகு உற்பத்தியாளர்களை பாதிப்படைய செய்கிறது.
2023-24 ஆம் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 144.30 மில்லியன் டன் எஃகில், 58.93 மில்லியன் டன் (40.84%) 1002-க்கும் மேற்பட்ட சிறு உற்பத்தியாளர்களாலும் 85.37 மில்லியன் டன் (59.16%) ஒருங்கிணைந்த எஃகு உற்பத்தியாளர்களாலும் உற்பத்தி செய்யப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, எஃகு தொழிலில் குறிப்பிடத்தக்க உற்பத்தி நாட்டின் பல பகுதிகளில் பரவியுள்ள சிறு உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது தெளிவாகிறது. எஃகு விலை குறைவு காரணமாக சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தேசிய எஃகு கொள்கையின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தித் திறனை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, 120 மில்லியன் டன் கூடுதல் உற்பத்தித் திறன் உருவாக்கமாகும். இதற்கென 120 பில்லியன் டாலர் அல்லது 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான முதலீட்டிற்கு ஒத்ததாகும். பெரிய மற்றும் சிறிய எஃகுத் தொழிலில் போதுமான மூலதன முதலீட்டுத் திறன் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். சர்வதேச சந்தையில் எஃகு விநியோகம் அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைவாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எஃகு நுகர்வு 13.5% வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. சுமார் 265 மில்லியன் டன் எஃகு தேவையை பூர்த்தி செய்ய 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு 300 மில்லியன் டன் உற்பத்தித்திறன் தேவைப்படும். போதுமான அளவில் உள்நாட்டு எஃகு உற்பத்தி திறன் உருவாக்கப்படாவிட்டால், நாடு எஃகு இறக்குமதியாளராக மாறுவது மட்டுமின்றி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை உருவாகும்.
தரமான எஃகு மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் அல்லது வெளிநாடுகளிலிருந்து இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) எஃகு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வகையில், 1376 எஃகு தரங்களை உள்ளடக்கிய 151 பிஐஎஸ் தர மதிப்பீடு கள் அறிவிக்கை செய்யப்பட்டு, எஃகு அமைச்சகத்தின் தரக் கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வருகின்றன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அல்லது வெளிநாடுகளிலிருந்து இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு பிஐஎஸ் தரத்திற்கு இணையானதாக இருப்பதை இது உறுதி செய்கிறது.
----
TS/SV/RR/DL
(Release ID: 2078127)
Visitor Counter : 7