நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இ-தாகில் சேவை செயல்படுத்தப்படுகிறது

Posted On: 27 NOV 2024 2:16PM by PIB Chennai

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் செயல்படும் இ-தாகில் (E-Daakhil)  இணையதளம் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் 2024 நவம்பர் 22 அன்று லடாக்கில் இ-தாகில் இணையதள சேவை தொடங்கப்பட்டது.

நுகர்வோரைப் பாதிக்கும் புதிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019, அறிவிக்கப்பட்டு 2020 ஜூலை 20 அன்று அமல்படுத்தப்பட்டது. நுகர்வோரின் புகார்களை பதிவு செய்வதற்கான எளிய செயல்முறையாக இ-தாகில் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இ-தாகில் என்பது நுகர்வோர் குறை தீர்க்கும் செயல்முறையை நெறிப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான தளமாகும். இது நுகர்வோருக்கான குறைதீர் மன்றங்களை அணுகுவதற்கு எளிய வழியை வழங்குகிறது.  பதிவு செய்ய நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.

தற்போது 2,81,024-க்கும் மேற்பட்ட பயனாளிகள் இ-தாகில் தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் 1,98,725 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 38,453 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077857

----

TS/PLM/KPG/DL


(Release ID: 2078106) Visitor Counter : 12