தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் நெட் திட்டத்தின் கீழ் கண்ணாடி இழை கேபிள் செயற்கைக்கோள் இணைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை

प्रविष्टि तिथि: 27 NOV 2024 3:32PM by PIB Chennai

பாரத் நெட் திட்டத்தின் கீழ் கண்ணாடி இழை கேபிள் (OFC)  செயற்கைக்கோள் இணைப்பு மூலம் கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.

நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் (சுமார் 2.64 லட்சம்) பிராட்பேண்ட் இணைப்பை வழங்க பாரத்நெட் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024 அக்டோபர் இறுதி வரை, பாரத்நெட் கட்டம்-1, கட்டம்-2 ஆகியவற்றின் கீழ், 2,14,283 கிராம ஊராட்சிகள் கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. 2024 அக்டோபர் இறுதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 10295 கிராம ஊராட்சிகள் பாரத நெட் திட்டத்தின் கீழ் கண்ணாடி இழை கேபிள் செயற்கைக் கோள் இணைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்க திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டம் ரூ.1,39,579 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077908

 

-----

TS/PLM/KPG/KR


(रिलीज़ आईडी: 2077980) आगंतुक पटल : 105
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri