சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024-ல் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அரங்கை திரு பிரதாப்ராவ் ஜாதவ் பார்வையிட்டார்
Posted On:
26 NOV 2024 6:52PM by PIB Chennai
புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அமைத்துள்ள சுகாதார அரங்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.பிரதாப்ராவ் ஜாதவ் பார்வையிட்டார்.
'ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உள்ள சுகாதார அரங்கு, மனிதன், விலங்கு, தாவரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியன ஆரோக்கியத்தில் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை எடுத்துக்காட்டுவதோடு நல்வாழ்வுக்கான விரிவான அணுகுமுறையையும் ஊக்குவிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஜாதவ், பல்வேறு சுகாதார முன்முயற்சிகளை காட்சிப்படுத்தும் வகையில் ஈர்க்கக்கூடிய அரங்கை அமைப்பதில் அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். "அமைச்சகம் பல அரங்குகளை அமைத்துள்ளது, பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகிறார்கள். அமைச்சகத்தின் உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்கும் பல்வேறு முயற்சிகள் மற்றும் சேவைகள் குறித்து அவர்களுக்கு தீவிரமாக எடுத்துரைக்கிறார்கள்.
"இந்த ஆண்டின் கருப்பொருள், 'ஒரே ஆரோக்கியம்', ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கான செயலூக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்கிறது. பல்வேறு சுகாதார திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆழமான புரிதலை அரங்குகள் வழங்குகின்றன.
***
TS/IR/AG/DL
(Release ID: 2077653)
Visitor Counter : 49