தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 8

தயாரிப்பாளர்கள் ஆர்வமுடையவர்களாகவும், நடைமுறை சார்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்: 55- வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்டீபன் வூலி

பிரபல ஆங்கில திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஸ்டீபன் வூலி, இன்று  அறிவொளியூட்டும் மாஸ்டர் கிளாஸில் உரையாற்றினார். ஒரு திரைப்பட தயாரிப்பாளர் யார் - திரைப்படத் தயாரிப்பின் ஐந்து முக்கிய நிலைகள் என்ன என்பதை கோவாவில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவர் எடுத்துரைத்தார்.

ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வு, ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் பன்முக பாத்திரத்தைப் பற்றிய ஆழமான பார்வையை வழங்கியது. திரைப்படத் தயாரிப்பு செயல்முறையை ஐந்து அத்தியாவசிய நிலைகளாக அதாவது  வளர்ச்சி, முன்-தயாரிப்பு, தயாரிப்புதயாரிப்புக்கு பிந்தைய நிலை, சந்தைப்படுத்தல் மற்றும் திரையிடுதல் என வகைப்படுத்தி அவர் உரையாற்றினார்.

ஒரு தயாரிப்பாளரின் பயணம், ஒரு கருத்து அல்லது கதைக்கான ஆழ்ந்த ஆர்வத்துடன் தொடங்குகிறது என்பதை வலியுறுத்துவதன் மூலம், ஸ்டீபன் மாஸ்டர் கிளாஸைத் தொடங்கினார். ஒரு தயாரிப்பாளர் முதலில் இந்தத்  திட்டத்தின் மீதான சிக்கல்களையும் ஆர்வத்தையும் உணர வேண்டும் என்று அவர் விளக்கினார். தயாரிப்பாளர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

தயாரிப்புக்கு முந்தைய கட்டம் பற்றிய தனது விவாதத்தில், ஸ்டீபன் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தயாரிப்பாளர்கள் தான் முதன்மை ஒத்துழைப்பாளர்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஒரு திரைப்பட தயாரிப்பு திட்டத்தை நிறைவேற்ற நிதியாளர்கள், படைப்பாற்றல் வல்லுநர்கள், பிற முக்கிய பங்குதாரர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077463

-----

TS/MM/KPG/DL

iffi reel

(Release ID: 2077588) Visitor Counter : 5