எரிசக்தி அமைச்சகம்
நீர்வகைமையின் கீழ் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஓடுகின்ற நீரில் மின்னுற்பத்தி செய்யும் டர்பைன் தொழில்நுட்பத்தை மத்திய மின்சார ஆணையம் அங்கீகரித்துள்ளது
Posted On:
26 NOV 2024 4:36PM by PIB Chennai
கார்பன் வெளியேற்றம் இல்லாத இலக்குகளை அடைவதற்கும், தேசத்திற்கான மின்சாரத் துறையின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் புதுமைகளை இயக்குவதற்கும் மாற்று தொழில்நுட்பங்களை ஆராய்வதற்கும் நீர் வகைமையின் கீழ் ஓடுகின்ற நீரில் மின்னுற்பத்தி செய்யும் டர்பைன் தொழில்நுட்பத்தை மத்திய மின்சார ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இந்த டர்பைன் பாயும் நீரின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்குகிறது. வழக்கமான அலகுகளைப் போலல்லாமல், இந்த அலகுகள் அணை, நீரைத் திசைதிருப்பும் கலிங்கு, தடுப்பணைகள் போன்ற பொருத்தமான சிவில் கட்டுமானங்களை நிர்மாணிப்பதன் மூலம் நீரின் சாத்தியமான ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
இந்தத் தொழில்நுட்பம் 24 மணி நேரமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதில் மின்சாரத் துறைக்கு ஆதரவளிக்கும் ஒரு தீர்வாகும். குறிப்பாக மோசமான மின் தொகுப்பு அணுகல் உள்ள பகுதிகளில் ஓடுகின்ற நீரில் மின்னுற்பத்தி செய்யும் டர்பைன்களை நிறுவுவது எளிதானது மற்றும் செலவு குறைந்தது ஆகும் . ஒரு யூனிட்டுக்கு ரூ. 2-3 உற்பத்தி செலவாகும். இந்த தொழில்நுட்பம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வாங்குபவர்கள், உற்பத்தியாளர்கள் ஆகிய இருவருக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தை அங்கீகரிப்பது, நீடித்த எரிசக்தி உற்பத்திக்கு கால்வாய்கள், நீர்மின் வழித்தட கால்வாய்கள் உள்ளிட்ட இந்தியாவின் விரிவான நீர் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும். இந்த தொழில்நுட்பம் ஜிகா வாட் அளவில் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது, இது மின்சாரத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
****
TS/SMB/KV/DL
(Release ID: 2077546)
Visitor Counter : 7