குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்புச் சட்ட தினத்தையொட்டி நாடாளுமன்றத்தில் குடியரசு துணைத்தலைவர் ஆற்றிய உரை (பகுதிகள்)

Posted On: 26 NOV 2024 12:55PM by PIB Chennai

குடியரசுத்தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர், மாநிலங்களவை துணைத்தலைவர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சக குடிமக்களே.

 பாரதம் தனது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த முக்கியமான நாள், ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆற்றல்மிக்க ஜனநாயகத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி, வலுவான உள்கட்டமைப்பு, பரவலான டிஜிட்டல் பயன்பாடு இவை அனைத்தும் சர்வதேச அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகின்றன. நமது அரசியலமைப்புச் சட்டம் இந்திய ஜனநாயகத்தை திறம்பட நிலைநிறுத்தியுள்ளது என்பதற்கு இந்த சாதனைகள் சான்றுகளாக உள்ளன.

உறுப்பினர்களே,

நமது அரசியலமைப்பின் முக்கிய மதிப்புகளைப் பிரதிபலிக்கவும், அதன் வழிகாட்டும் கொள்கைகளுக்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் இது ஒரு சந்தர்ப்பமாகும்.

இந்த தலைசிறந்த படைப்பு நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் ஆழ்ந்த தொலைநோக்கு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்துகிறது. அவர்கள் சுமார் மூன்று ஆண்டுகளில் நமது தேசத்தின் தலைவிதியை வடிவமைத்தனர். ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு முன்மாதிரியாக இருந்தனர். ஒருமித்த கருத்து மற்றும் புரிதலின் அடிப்படையில், சர்ச்சைக்குரிய மற்றும் பிரிவினைவாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிகாட்டியுள்ளனர்.

ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!

----

(Release ID 2077332)

TS/MM/KPG/KR


(Release ID: 2077501) Visitor Counter : 5


Read this release in: English , Urdu , Hindi , Gujarati