தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
துணிச்சல், நெகிழ்வுத்தன்மை மற்றும் நம்பிக்கையின் சக்திவாய்ந்த கதை: 'மகாவதார் நரசிம்மர்' 55 வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது
அனிமேஷன் படமான "மகாவதார் நரசிம்ஹா" சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். அஸ்வின் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பிரமிக்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. விஷ்ணு பகவானின் தசாவதாரங்களில் மூன்றாவது மற்றும் நான்காவது அவதாரங்களான வராஹா மற்றும் நரசிம்ம அவதாரங்களின் கதைகளின் நம்பிக்கை, துணிச்சல் மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்ற அம்சங்களை விவரிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின் குமார், "இது அனிமேஷன் படமாக இருப்பதுடன் உழைப்பு மற்றும் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை போற்றும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறினார். விஷ்ணு புராணம், நரசிம்ம புராணம் மற்றும் ஸ்ரீமத் பாகவத புராணம் போன்ற காவியங்களை அனைத்து தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் வகையில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077127
*****
TS/SV/RR/KR
(Release ID: 2077439)