தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஃபிலிம் பஜார் 2024: திரைப்பட சிறப்புகள், உலகளாவிய கூட்டு முயற்சிகளின் கொண்டாட்டம்
திரைப்பட உயர் சிறப்பு தன்மைகளையும், திரைப்படத் துறையில் சர்வதேச ஒத்துழைப்பையும் கொண்டாடும் வகையில், கோவாவில் நடைபெற்று வரும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI-ஐஎஃப்எஃப்ஐ) ஒரு பகுதியாக ஃபிலிம் பஜார் 2024 என்ற நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்ற இந்த ஃபிலிம் பஜார் நிகழ்வு இன்று நிறைவடைந்தது. தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் (NFDC) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, திரைப்பட தொழில்துறை ஜாம்பவான்கள், வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து புதிய படைப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.
இந்த நிகழ்வின் போது, முகேஷ் சாப்ரா இரண்டு இணை தயாரிப்பு சந்தை (சிபிஎம்) திட்டங்களில் ஃபிலிம் பஜாருடனான தனது ஒத்துழைப்பை அறிவித்தார்.
இந்த ஃபிலிம் பஜாரில் சில திரைப்படங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன:
இந்த விழாவில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளரும், என்எப்டிசி நிர்வாக இயக்குநருமான திரு பிரிதுல் குமார், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படத்துறை இணைச் செயலாளர் திருமதி விருந்தா மனோகர் தேசாய் ஆகியோர் உரையாற்றினர். பிலிம் பஜாரின் ஆலோசகர் ஜெரோம் பைலார்ட், புகழ்பெற்ற நடிகர் அவினாஷ் திவாரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2076882
***
TS/PLM/AG/RR/DL
(Release ID: 2077090)