தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

55-வது ஐஎஃப்எஃப்ஐ-யில் 'பாசிமாஸ் வோம்ப்' , 'லூனிஸ்' திரைப்படங்கள் இடம்பெற்றன

 

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) 'உலக சினிமா' பிரிவில் இரண்டு குறிப்பிடத்தக்க படங்கள் இன்று (24.11.2024) இடம்பெற்றன. கனடிய திரைப்படம், 'பாசிமாஸ் வோம்ப்' போலந்து திரைப்படம், 'லூனிஸ்' ஆகியவை அவை. தொலைநோக்கு இயக்குநர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் படங்கள் சமூக அழுத்தங்கள், அடையாளத்திற்கான தேடல், மீட்பு, நம்பிக்கை, சிறந்த வாழ்க்கையைத் தேடுதல் போன்ற ஆழமான கருப்பொருள்களை ஆராய்கின்றன.

இது தொடர்பான ஊடக உரையாடலின் போது, 'பாசிமாஸ் வோம்ப்' படத்தின் இயக்குநரும் நடிகருமான பாபேக் அலியாசா, இந்த படம் இந்திய வாடகைத் தாய் கதைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறினார்.

இந்திய - கனடிய சினிமாவை ஒப்பிடுகையில், கனடா இந்தியாவை விட குறைவான திரைப்படங்களையே தயாரிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், கலைத் திரைப்படங்களை ஊக்குவிக்க  இந்திய-கனடிய ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

'லூனிஸ்'படத்தின் நடிகை அலிஜா ஸ்டாசிவிச், தமது பாத்திரத்திற்கு எடை மாற்றங்கள் உட்பட குறிப்பிடத்தக்க உடல் மாற்றம் தேவைப்பட்டது என்று பகிர்ந்து கொண்டார்.

*****

PLM/KV

 

 

 

 

iffi reel

(Release ID: 2076666) Visitor Counter : 77