நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நுகர்வோர் குறைகளைத் தீர்க்க 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் இணைந்து செயல்படுகிறது

Posted On: 24 NOV 2024 2:16PM by PIB Chennai

 

ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் (NCH) அதன் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த நிறுவனங்கள் -காமர்ஸ், பயணம், சுற்றுலா, தனியார் கல்வி, எஃப்எம்சிஜி, நுகர்வோர் சாதனங்கள், மின்னணு தயாரிப்புகள், சில்லறை விற்பனை நிலையங்கள், ஆட்டோமொபைல்கள், டி.டி.எச் - கேபிள் சேவைகள், வங்கி உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைந்துள்ளன. இந்த ஒருங்கிணைப்பின் மூலம், நிறுவனங்கள் தொடர்பான புகார்கள் தீர்வுக்காக நேரடியாக அவர்களுக்கு மாற்றப்படுகின்றன.

2017-ம் ஆண்டில் 263 நிறுவனங்களாக இருந்த ஒருங்கிணைப்பு எண்ணிக்கை தற்போது 1009 நிறுவனங்களாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி ஹெல்ப்லைனின் செயல்திறனை மேம்படுத்துவதிலும், விரைவான, பயனுள்ள குறை தீர்ப்பிலும் கவனம் செலுத்தப்படுவதை எடுத்துக்காட்டுகிறது. நுகர்வோர் புகார்கள் வழக்குக்கு முந்தைய கட்டத்தில் தீர்க்கப்படுவதை இவை உறுதி செய்கின்றன. நுகர்வோரின் நம்பிக்கையை வளர்க்கின்றன. இருப்பினும், ஒரு புகார் தீர்க்கப்படாவிட்டால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் கீழ் பொருத்தமான நுகர்வோர் ஆணையத்தை அணுக நுகர்வோர் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை (DoCA), குறை தீர்க்கும் செயல்முறையை மேம்படுத்த குறை விவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பேச்சு அங்கீகாரம், மொழிபெயர்ப்பு அமைப்பு, நுகர்வோர் தங்கள் உள்ளூர் மொழிகளில் குரல் உள்ளீடு மூலம் புகார்களைப் பதிவு செய்ய அனுமதிக்கும். இது மனித தலையீட்டைக் குறைக்கும்.

தேசிய நுகர்வோர் உதவி மையத்தை (என்.சி.எச்) துறை சீரமைத்துள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோருக்கு வழக்குக்கு முந்தைய கட்டத்தில் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான மைய புள்ளியாக உள்ளது. இந்த உதவி எண் சேவை இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி, பஞ்சாபி, நேபாளி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், மைதிலி, சந்தாலி, பெங்காலி, ஒடியா, அசாமி, மணிப்புரி உள்ளிட்ட 17 மொழிகளில் கிடைக்கிறது.

*****

PLM/KV

 

 


(Release ID: 2076574) Visitor Counter : 31