கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (என்சிடிசி) 91-வது பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றினார்


கூட்டுறவுத் துறை மூலம் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது - திரு அமித் ஷா

Posted On: 23 NOV 2024 3:20PM by PIB Chennai

 

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (என்சிடிசி) 91-வது பொதுக் குழு கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கூட்டுறவுத் துறை மூலம் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார். கூட்டுறவு இயக்கத்தின் மூலம் நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். கூட்டுறவின் மூலம் நாட்டை தற்சார்புடையதாக மாற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாகவும், இந்த திசையில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் திரு அமித் ஷா கூறினார். தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் வெற்றி, ஊரகப் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அதன் திறனில் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

இரண்டாம் கட்ட வெண்மைப் புரட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களில் பால் கூட்டுறவு அமைப்புகளை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை உருவாக்க தேசிய பால்வள வாரியமும் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகமும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்இந்த முன்முயற்சி, வெண்மைப் புரட்சியை முன்னோக்கி நகர்த்துவது மட்டுமல்லாமல், பழங்குடி சமூகங்களுக்கும் பெண்களுக்கும் அதிகாரம் அளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கும் என்று அவர் கூறினார்.

 கூட்டுறவு சங்கங்களை ஒருங்கிணைப்பதில் தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். தொடக்க வேளாண் கடன் சங்கங்களை (பிஏசிஎஸ்) வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகமும், கூட்டுறவு அமைச்சகமும் முக்கியப் பங்காற்றும் என்று அமைச்சர் கூறினார்.

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து கூட்டுறவு பயிற்சித் திட்டத்தை கூட்டுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மத்திய அரசின் திட்டங்களுடன் மாநில, மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு உதவுவதும், பிஏசிஎஸ்-ஸை வலுப்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்தார். கூட்டுறவு பயிற்சித் திட்டம் பங்கேற்பாளர்களுக்கு விலைமதிப்பற்ற நேரடி அனுபவத்தைப் பெற உதவும் என அவர் கூறினார். நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையை மேலும் வலுப்படுத்த கூட்டுறவு பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த திரு அமித் ஷா, கூட்டுறவுகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.

*****

PLM/KV

 


(Release ID: 2076330) Visitor Counter : 17