தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'ஃபோர்ஸ் ஆஃப் நேச்சர்: த ட்ரை 2" என்ற திரைப்படம் ' தனிக்கவனம் செலுத்தப்படும் ஆஸ்திரேலியா நாட்டுப் பிரிவில் திரையிடப்படுகிறது
ஆஸ்திரேலிய சினிமாவின் துடிப்பு மற்றும் நவீனத்துவத்தை கொண்டாடும் வகையில், எழுச்சி மிக்க மாநிலமான கோவாவில் நடைபெற்று வரும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI)வில் "தனிக்கவனம் செலுத்தப்படும் நாடு:ஆஸ்திரேலியா "பிரிவில் சிறப்பு அம்சமாக ஃபோர்ஸ் ஆஃப் நேச்சர்: தி டிரை 2 ஐ திரையிடப்படுகிறது. இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ராபர்ட் கோனொல்லி இன்று கோவாவில் ஊடகங்களுடன் உரையாடினார்.
ஒரு நிர்வாக பயணமாக தொலைதூர வனாந்தரத்திற்கு சென்ற, ஐந்து பெண்களில், நான்கு பேர் மட்டுமே திரும்பி வரும் கதையை இந்தப் படம் சித்தரிக்கிறது. ஃபெடரல் போலீஸ் ஏஜென்ட் ஆரோன் ஃபால்க், காணாமல் போன நடைப்பயணியின் தலைவிதியை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபடுகிறார். அவர் பதில்களைத் தேடும்போது, அதே கரடுமுரடான நிலப்பரப்பில் அவரது குழந்தைப் பருவத்திலிருந்து மனதில் வேரூன்றிய நினைவுகள், மீண்டும் வெளிவரத் தொடங்குகின்றன. உண்மையில் என்ன நடந்தது என்ற மர்மத்துடன் கதை பின்னிப்பிணைந்துள்ளது. இந்த படம் செய்நேர்த்தி மிக்க திரைப்படம். நீதி, குடும்ப விசுவாசம் மற்றும் கடந்த காலத்தின் உணர்ச்சி வடுக்கள் போன்ற கருப்பொருள்களை இது ஆராய்கிறது. இது ஒரு தளர்வில்லாத த்ரில்லர் ஆகும். ஒரு பதட்டமான விசாரணையை செறிவான கதாபாத்திரத்தின் கதைசொல்லலுடன் கலக்கிறது, இது கிராமப்புற ஆஸ்திரேலியாவின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஊடகவிலாளர்களிடம் உரையாற்றிய ராபர்ட் கோனொல்லி, இந்திய சினிமா மீதான தனது ஆழ்ந்த பாராட்டை வெளிப்படுத்தினார். "நாங்கள் இந்தியாவைப் பற்றி சினிமா மூலம் கற்றுக்கொள்கிறோம். இங்கு திரண்டுள்ள இந்திய பார்வையாளர்களுக்காக திரையிடுவதை நான் உண்மையிலேயே நேசித்தேன்" என்றார். அவரது படங்களில் நிலத்தோற்றங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டபோது, அவர் அவற்றின் இன்றியமையாத பாத்திரத்தை வலியுறுத்தினார். அவற்றை மிகவும் முக்கியமானவை என்றும் அவரது கதைகளில் அவை சிறப்பு 'கதாபாத்திரங்கள்' என்றும் விவரித்தார். அர்த்தமுள்ள கதையாடலை வடிவமைப்பதற்கு நிலத்தோற்றங்களின் மக்கள் மீது எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்துகின்றன என்று புரிந்துகொள்வது அவசியம் என்றும் அவர் விளக்கினார்.
பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளை திரைப்படம் மூலம் கையாள்வது குறித்து எழுப்பிய கேள்விக்கு இயக்குனர் பிரச்சினையின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டார், "இது ஒரு முக்கியமான பிரச்சினை, வளர்ந்து வரும் திரைப்பட தயாரிப்பாளர்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை முன்னிலைப்படுத்தும் படங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்." என்றார்.
நிறைவு உரையில், இந்திய சினிமா உலகளவில் பார்க்கப்படுவது அதிகரித்து வருவதாகவும் ஆஸ்திரேலியாவிலும் நிறைய பார்வையாளர்கள் பார்க்கின்றனர் என்றும் அவர் எடுத்துரைத்தார், இந்திய சர்வதேச திரைப்பட விழாவைப் பற்றி பெருமையாக குறிப்பிட்ட இயக்குநர், இது "உலகளவில் சில அற்புதமான கதைகளை உருவாக்குவதற்கான அடித்தளம்" என்று குறிப்பிட்டார்.
***
TS/MM/AG/DL
(Release ID: 2076059)
Visitor Counter : 60