நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய உணவுக் கழகம், மகாராஷ்டிரா, திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்நாட்டு) கீழ் அரிசி விற்பனையை அறிவிக்கிறது – 2024 நவம்பர் 27-ல் ஏலம்
Posted On:
22 NOV 2024 3:43PM by PIB Chennai
இந்திய உணவுக் கழகம் (FCI), மகாராஷ்டிரா பிராந்திய அலுவலகம், திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் (உள்நாட்டு) [OMSS (D)] கீழ் அரிசி விற்பனைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024 ஆகஸ்ட் முதல் கொள்முதல் செய்பவர்கள் எப்சிஐ-ன் மின்னணு ஏல சேவை வழங்குநரான "m-Junction Services Limited" உடன் பதிவு செய்து கொள்வதன்மூலம், மின்னணு ஏல செயல்பாட்டில் பங்கேற்கலாம். அரிசி வாங்க ஆர்வமுள்ள வர்த்தகர்கள், மொத்தமாக வாங்குபவர்கள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்: https://www.valuejunction.in/fci/ எம்பேனல் செயல்முறை 72 மணி நேரம் வரை ஆகும். 2024 நவம்பர் 27 அன்று நடைபெறவிருக்கும் ஏலத்திற்கு, எப்சிஐ கோவா மாநிலத்திலிருந்து 500 மெட்ரிக் டன் அரிசியை வழங்கும். ஏலத்திற்கான குறைந்தபட்ச அளவு 1 மெட்ரிக் டன் மற்றும் ஒரு ஏலதாரரின் அதிகபட்ச அளவு 2000 மெட்ரிக் டன் ஆகும். ஓஎம்எஸ்எஸ் (டி) திட்டம் அதிகரித்து வரும் அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும், சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் உதவும்.
***
TS/MM/AG/KR/DL
(Release ID: 2076054)
Visitor Counter : 18