கலாசாரத்துறை அமைச்சகம்
கலாநிதி ஹரேகிருஷ்ண மஹ்தாப் அவர்களின் நீடித்த மரபின் 125 வது பிறந்த நாள் விழா
Posted On:
21 NOV 2024 5:46PM by PIB Chennai
உத்கல் கேசரி டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தாப் அவர்களின் 125-வது பிறந்த நாளையொட்டி மத்திய கலாச்சார அமைச்சகம் புதுதில்லி விஞ்ஞான் பவனில் சிறப்பு புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
லலித் கலா அகாடமி சார்பில், டாக்டர் மஹ்தாப்பின் வாழ்க்கை பயணத்தை சித்தரிக்கும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. டாக்டர் ஹரேகிருஷ்ணாவின் மரபு, அவரது ஆரம்ப வாழ்க்கை, சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்பு மற்றும் ஒடிசா மாநிலத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசாவைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்ட குழுவால் இந்த கண்காட்சி உருவாக்கப்பட்டது. கண்காட்சி மற்றும் ஓவியங்களின் விவரம், துடிப்பு மற்றும் படைப்பாற்றலை குடியரசுத் தலைவர் வெகுவாக பாராட்டினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் குடியரசுத் தலைவருடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், டாக்டர் மஹ்தப்பின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தமது உரையில், டாக்டர் மஹ்தாப்பின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை குறித்த விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவரது முக்கிய பங்கை எடுத்துரைத்தார். டாக்டர் மஹ்தாப் சுதந்திரத்திற்காக போராடியதோடு மட்டுமல்லாமல், ஒடிசாவின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075570
***
MM/RS/DL
(Release ID: 2075608)