தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 3

இந்திய பனோரமாவில் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய முயற்சித்தேன்: ஹிமான்ஷு சேகர் கதுவா, நடுவர் குழு உறுப்பினர்

384 திரைப்படங்களில் இருந்து 20 இந்திய திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பது கடினமான பணியாக இருந்ததாக, கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த IFFI-க்கு தேர்வு செய்யப்படாத திரைப்படங்கள், தரம் குறைந்தவை என கருதப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் IFFI 2024-ல் இந்தியன் பனாரோமாவின் கதையம்சத் திரைப்படப் பிரிவின் நடுவர் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர். 55-வது ஐ.எஃப்.எஃப்.ஐ 2024-ல் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர்கள் பேசினர்.

இந்தியன் பனோரமாவுக்கான தேர்வு செயல்முறை குறித்த தனது முன்னோக்குகளைப் பகிர்ந்து கொண்ட பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஹிமான்ஷு சேகர் கதுவா, நடுவர் குழு உறுப்பினர்களுக்கு இது ஒரு கடினமான பணியாகும் என்றார். ஏனெனில், அவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்றும், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய விரும்புவதாகவும் விளக்கினார். 13 நடுவர்கள் அடங்கிய குழு நாற்பத்திரண்டு நாட்கள் விவாதித்து, சிறந்த இருபத்தைந்து படங்களை தேர்வு செய்தது. கோவா ஒரு விருப்பமான படப்பிடிப்பு இடமாக மாறியுள்ளது என்றும், கோவாவில் படப்பிடிப்பின் போது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதை இது காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய நடுவர் குழு உறுப்பினர் மனோஜ் ஜோஷி, நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வரும் திறமை, திரைப்படங்கள் மற்றும் படைப்பாற்றலுக்கு நியாயம் வழங்க நடுவர் குழு முயற்சித்தது என்றார். "நாம்தான் உலகின் முதன்மையான கதை சொல்லிகள். கதை சொல்வது நம் ரத்தத்தில் ஊறியது. உலகிலேயே சிறந்த உள்ளடக்கங்களை வழங்கும் நாடாக நாம் திகழ்கிறோம்" என்று திரு ஜோஷி மேலும் கூறினார்.

நடுவர் குழு உறுப்பினர் ரத்னோத்தமா சென்குப்தா கூறுகையில், ஐ.எஃப்.எஃப்.ஐ 2024-ல் இந்திய பனோரமா திரைப்படங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் இந்திய சினிமாவின் பன்முகத்தன்மையையும் ஒருசேர வெளிப்படுத்துகின்றன. இந்த திரைப்பட விழா 10 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்றாலும், பல்வேறு வகையான மற்றும் வகைமைகளைக் கொண்ட பல பிரிவுகளைக் கொண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

நடுவர் குழு உறுப்பினர் அஷூ திரிகா கூறுகையில், சினிமா ஒரு மதம் போன்றது என்றும், தேர்வு மிகவும் உன்னிப்பாகவும் மத ரீதியாகவும் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இதுபோன்ற அனைத்து பிரிவுகளிலும் இந்திய சினிமா புதிய தரத்தை அடைந்து உலகத் தரத்திற்கு இணையாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

நடுவர் குழு உறுப்பினர் பிரியா கிருஷ்ணசாமி பேசுகையில், இந்திய சினிமாவில் இருக்கும் கருப்பொருளை பாராட்டினார். "புதிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் கலை வடிவத்தையும், புதிய சினிமா மொழியையும் எவ்வாறு பரிசோதனை செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. திரைப்படங்களின் கவனமான தேர்வு மூலம், திரைப்படத் தயாரிப்பில் வரவிருக்கும் போக்குகளை வெளிப்படுத்தவும், இந்திய சினிமாவின் பல்வேறு வகைகளை உலகிற்கு முன்னிலைப்படுத்தவும் நடுவர் குழு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ) முதன்மை பிரிவான இந்தியன் பனோரமாவில் 25 கதையம்ச திரைப்படங்கள் மற்றும் 20 கதை அம்சம் அல்லாத திரைப்படங்கள் 55-வது பதிப்பில் திரையிடப்பட உள்ளன. 384 சமகால இந்திய திரைப்படங்களிலிருந்து 25 திரைப்படங்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்போக்கு வணிக பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 திரைப்படங்கள் உள்ளடங்கும்.இந்தியன் பனோரமா 2024-ன் தொடக்க படமாக நடுவர் குழு திரு ரன்தீப் ஹூடா இயக்கிய "ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர் (இந்தி)" படத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075548
 

***

TS/MM/RS/DL

iffi reel

(Release ID: 2075599) Visitor Counter : 10