தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஆதார் அடிப்படையிலான ஓடிபி மூலம் ஊழியர்களுக்கு அனைவருக்குமான கணக்கு எண்ணை செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது
Posted On:
21 NOV 2024 2:02PM by PIB Chennai
ஆதார் பணப்பட்டுவாடா இணைப்பு மூலம் நலத்திட்டப் பயனாளிகளுக்கு மானியம் / ஊக்கத்தொகை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் 100% பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை உறுதி செய்யுமாறும், அமைச்சகங்கள் / துறைகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
மத்திய பட்ஜெட் 2024-25-ல் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் மூலம் அதிகபட்ச எண்ணிக்கையிலான தொழிலதிபர்கள் மற்றும் ஊழியர்கள் பயனடைவதை உறுதி செய்வதற்காக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானதூ தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை ஒரு இயக்கம் போன்ற முனைப்புடன் தொழிலதிபர்களுடன் பணியாற்றவும், ஊழியர்களின் அனைவருக்குமான கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மண்டல மற்றும் பிராந்திய அலுவலகங்களை ஒருங்கிணைத்து திறம்பட சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதாரை அடையாள ஆவணமாகப் பயன்படுத்துவது, அரசு பணப்பட்டுவாடா செயல்முறைகளை எளிதாக்குகிறது, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதுடன், பயனாளிகள் தங்கள் உரிமைகளை தடையின்றி பெறுவதை உறுதி செய்கிறது. ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு, ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்களை தயாரிக்க வேண்டிய அவசியத்தில் இருந்து விடுவிக்கிறது.
முதல் கட்டத்தில், முதலாளிகள், நடப்பு நிதியாண்டில் சேரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆதார் அடிப்படையிலான ஓடிபி (OTP) மூலம் யுஏஎன் பயன்படுத்தும் செயல்முறையை 2024 நவம்பர் 30க்குள் முடிக்க வேண்டும். அவர்களுடன் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்கள் செயல்முறையை முடிக்க வேண்டும்.
UAN செயல்படுத்தல் ஊழியர்களுக்கு EPF-ன் விரிவான ஆன்லைன் சேவைகளுக்கு தடையற்ற அணுகலை வழங்குகிறது, இது அவர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளை திறம்பட நிர்வகிக்கவும், PF பாஸ்புக்குகளைப் பார்க்கவும், பதிவிறக்கவும், திரும்பப் பெறுதல், முன்பணங்கள் அல்லது இடமாற்றங்களுக்கான ஆன்லைன் உரிமைகோரல்களைச் சமர்ப்பிக்கவும், தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்கவும், உரிமைகோரல்களைக் கண்காணிக்கவும் உதவுகிறது. இது, ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே EPFO சேவைகளை 24/7 மணி நேரமும் அணுக அனுமதிக்கிறது, EPFO அலுவலகங்களுக்கு நேரில் வருகை தர வேண்டிய தேவையை இது தவிர்க்கிறது.
ஆதார் அடிப்படையிலான OTP (ஒரு முறை கடவுச்சொல்)-ஐப் பயன்படுத்தி செயல்படுத்தும் செயல்முறையை முடிக்க முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம் முதலாளிகள் தங்கள் ஊழியர்கள் UAN-ஐ செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்:
EPFO உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்லவும்.
"முக்கியமான இணைப்புகள்" என்பதன் கீழ் உள்ள "UAN-ஐ செயல்படுத்து" இணைப்பைக் கிளிக் செய்யவும்.
UAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
EPFO-ன் டிஜிட்டல் சேவைகளின் முழு வரம்பையும் அணுக, ஊழியர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆதார் OTP சரிபார்ப்பை ஒப்புக்கொள்ளவும்.
உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP-ஐப் பெற "அங்கீகார PIN-ஐ பெறு" என்பதைக் கிளிக் செய்யவும்.
செயல்படுத்தலை முடிக்க OTP-ஐ உள்ளிடவும்,
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டவுடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு கடவுச்சொல் அனுப்பப்படும்.
இரண்டாவது கட்டத்தில், முன்னோக்கிச் செல்லும்போது, யுஏஎன் செயல்படுத்தலில் முகம்-அங்கீகார தொழில்நுட்பத்தின் மூலம் பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் அதிநவீன வசதியும் அடங்கும்.
--------------
(Release ID: 2075422)
TS/MM/RS/KR
(Release ID: 2075464)
Visitor Counter : 20