அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மேம்பட்ட நீர் மேலாண்மை பயிற்சியில் ஐஐடி ரோபர் முன்னிலை வகிக்கிறது

Posted On: 20 NOV 2024 3:32PM by PIB Chennai

ரோபரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி)  சமீபத்தில் ஜவுளி மற்றும் வீட்டு தயாரிப்புகளில் உலகளவில் முன்னிலை வகிக்கும் ட்ரைடெண்ட் குழுமத்தின் ஊழியர்களுக்கு 'நீர் மேலாண்மையில் முன்னேற்றங்கள்' குறித்த பிரத்யேக சான்றிதழ் திட்டத்தை நிறைவு செய்தது. ஐ.ஐ.டி ரோபார் வளாகத்தில் நடத்தப்பட்ட ஐந்து நாள் திட்டம், தொழில்துறை பயன்பாடுகளுக்கு ஏற்ப நிலையான நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களில் அதிநவீன அறிவு மற்றும் அனுபவத்தை வழங்க உருவாக்கப்பட்டுள்ளது.

ட்ரைடென்ட்டின் அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்காக குறிப்பாக உருவாக்கப்பட்ட இந்த திட்டம், நீர் மறுசுழற்சி, எரிசக்தி திறன் முறைகள் மற்றும் ரசாயனம் இல்லாத சுத்திகரிப்பு தீர்வுகளை எடுத்துரைத்தது. ஐ.ஐ.டி ரோபர் ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் நிபுணர் தலைமையிலான அமர்வுகள், பங்கேற்பாளர்கள் கோட்பாட்டு அறிவு மற்றும் நடைமுறை நிபுணத்துவம் இரண்டையும் பெற்றிருப்பதை உறுதி செய்தன.

வகுப்பறை அறிவுறுத்தல் மற்றும் ஆய்வகப் பயிற்சி ஆகியவற்றைக் கொண்ட திட்டத்தின் தனித்துவமான கலவையை பங்கேற்பாளர்கள் பாராட்டினர், இது மேம்பட்ட நீர் மேலாண்மை தீர்வுகளின் நிஜ உலக பயன்பாடுகளை ஆராய அவர்களுக்கு உதவியது. இந்த முயற்சி தொழில்துறை-கல்வி ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் தொழில்துறைகளில் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் ஐ.ஐ.டி ரோபரின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

***

 

(Release ID: 2075041)

TS/IR/AG/KR


(Release ID: 2075094) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi , Punjabi