நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு நவம்பர் 24-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
20 NOV 2024 3:19PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் 2024 நவம்பர் 24 அன்று காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மைக் குழு அறையில் நடைபெறும். பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் 2024 நவம்பர் 25 அன்று தொடங்கி டிசம்பர் 20 அன்று நிறைவடைகிறது. "அரசியலமைப்பு தினத்தை" யொட்டி, 2024 நவம்பர் 26 அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகள் நடைபெறாது.
***
(Release ID: 2075028)
TS/IR/AG/KR
(Release ID: 2075092)
Visitor Counter : 42