உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் காந்திநகரில் 50-வது அகில இந்திய காவல்துறை அறிவியல் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்

Posted On: 19 NOV 2024 5:33PM by PIB Chennai

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற 50-வது அகில இந்திய காவல்துறை அறிவியல் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை  அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை விருந்தினராகப் பங்கேற்று  உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமை இயக்குநர் திரு ராஜீவ் குமார் சர்மா மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சர் தமது உரையில், அகில இந்திய காவல் அறிவியல் மாநாடு இல்லாமல் நமது காவல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை இன்று பொருத்தமானதாக வைத்திருப்பது சாத்தியமில்லை என்று கூறினார். குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் நமது முழு அமைப்பையும் பொருத்தமானதாக வைத்திருப்பதே காவல்துறை அறிவியல் மாநாடு என்பதை அவர் எடுத்துரைத்தார். கட்டமைப்பு, பங்கேற்பு, உள்ளீடுகளைச் சேகரிக்கும் முறைகள், காவல் நிலையங்களில் காவலர் நிலை வரை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வழங்கும் அமைப்பு ஆகியவற்றை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று திரு ஷா வலியுறுத்தினார். இந்த அம்சங்களை விரிவாக மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்று அவர் மேலும் கூறினார்.

எந்த ஒரு அமைப்புமுறையும் 50 ஆண்டுகளுக்கு மாறாமல் இருந்தால் அது வழக்கற்றுப் போய்விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். கடந்த பல தசாப்தங்களாக நாட்டில், உலகில், குற்றங்கள் செய்வதிலும்   காவல்துறையிலும்  குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த மாற்றங்களுக்கு ஏற்ப காவல்துறை அறிவியல் மாநாடு மாறியுள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பினார். காவல்துறை அறிவியல் மாநாட்டில் முடிவுகளின் முறை, நோக்கங்கள், செயல்படுத்தல் ஆகியவற்றில் சரியான நேரத்தில் மாற்றங்களைச் செய்வதில் நாம் ஓரளவு பின்தங்கியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார். எதிர்கால சவால்களைப் புரிந்து கொள்ளாமல், நமது திட்டமிடல் ஒருபோதும் வெற்றிகரமாக இருக்க முடியாது என்றும் திரு ஷா கூறினார்.

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கான முதல் படி கணினிமயமாக்கல் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். நாட்டின் 100% காவல் நிலையங்கள், அதாவது அனைத்து 17,000 காவல் நிலையங்களும் கணினிமயமாக்கப்பட்டு குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலைப்பின்னல் மற்றும் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, 22,000 நீதிமன்றங்கள் இ-நீதிமன்ற அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இரண்டு கோடிக்கும் அதிகமான கைதிகளின் தரவுகள்  இப்போது இ-சிறை அமைப்பின் கீழ் கிடைக்கின்றன. இ-பிராசிக்யூஷன் மூலம், 1.5 கோடிக்கும் அதிகமான வழக்குகளுக்கான தரவு கிடைக்கிறது. மின்-தடயவியல் மூலம், 23 லட்சத்துக்கும் அதிகமான தடயவியல் முடிவுகளுக்கான தரவுகளையும் அணுக முடியும்.

வரவிருக்கும் நாட்களில், இந்தியாவும் முழு உலகமும் எதிர்கொள்ளும் பல சவால்கள் உள்ளன. அவற்றுக்கு இந்தியாவில் தீர்வு காண நாம் முயற்சிக்க வேண்டும் என்று திரு அமித் ஷா கூறினார். சைபர் குற்றங்களைக் கையாள்வது, ஊடுருவலைத் தடுப்பது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எல்லைகளைப் பாதுகாத்தல், ட்ரோன்களின் சட்டவிரோத பயன்பாட்டை நிறுத்துதல், போதைப்பொருள் புலனாய்வு மற்றும் விழிப்புணர்வில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அதிகரித்தல்தவறான டார்க் வெப் பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் நிவர்த்தி செய்தல் ஆகியவை மிக முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஐந்து துறைகளில் முன்னேற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் திறமையான நபர்களுடன் காவல்துறை அறிவியல் மாநாடு ஒத்துழைக்க வேண்டும் என்று திரு ஷா கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074684

***

SMB/RS/DL


(Release ID: 2074767) Visitor Counter : 33