பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருக்கு "கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர்" என்ற தேசிய விருது வழங்கப்பட்டது

प्रविष्टि तिथि: 17 NOV 2024 8:11PM by PIB Chennai

நைஜீரிய கூட்டாட்சி குடியரசின் அதிபர் மேதகு திரு. போலா அகமது டினுபு, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ராஜதந்திரம் மற்றும் இந்திய-நைஜீரிய உறவுகளை மேம்படுத்துவதில்  அவரது சிறந்த பங்களிப்பிற்காக "கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் நைஜர்" என்ற தேசிய விருதை பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வழங்கினார். பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியா  உலகளாவிய அதிகார மையமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும், அவரது உருமாற்றம் செய்யும் ஆட்சி அனைவருக்கும் ஒற்றுமை, அமைதி மற்றும் பகிரப்பட்ட செழிப்பை வளர்த்துள்ளது என்றும் விருதுக்கான பாராட்டுப் பத்திரம் குறிப்பிடுகிறது.

விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்த கவுரவத்தை இந்திய மக்களுக்கும், இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான நீண்டகால வரலாற்று நட்புறவுக்கும் அர்ப்பணித்தார். இந்த அங்கீகாரம், இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் கூட்டாண்மை மற்றும் உலகளாவிய தெற்கின் எதிர்பார்ப்புகளுக்கு அவற்றின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

1969-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவர், பிரதமர்  திரு நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

***

TS/BR/KR/DL


(रिलीज़ आईडी: 2074332) आगंतुक पटल : 63
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Telugu , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam