மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானுடன் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், குப்தா-கிளின்ஸ்கி இந்தியா இன்ஸ்டிடியூட் பிரதிநிதிகள் சந்திப்பு

Posted On: 17 NOV 2024 5:57PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று அமெரிக்காவின் மேரிலாந்தின் பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (ஜேஹெச்யூ) தலைவர் திரு ரொனால்ட் ஜே. டேனியல்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவை சந்தித்தார்.  ஜேஹெச்யூ-வின் ஒரு உள் பிரிவான குப்தா கிளின்ஸ்கி இந்தியா நிறுவனத்தின் (ஜிகேஐஐ) அதிகாரிகளும் இந்த தூதுக்குழுவில் இடம்பெற்று இருந்தனர்.

உயர்கல்வித் துறைச் செயலாளர் திரு கே.சஞ்சய் மூர்த்தி மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) மூலம் சாத்தியமான நல்ல வாய்ப்புகளை திரு தர்மேந்திர பிரதான் எடுத்துரைத்தார். இது கல்வி இந்தியாவின் கல்வித் துறையை முன்னேற்றுவதற்கு வழி வகுத்துள்ளது என்று அவர் கூறினார். இந்திய உயர் கல்வி நிறுவனங்களுடன் வலுவான ஒத்துழைப்பை உருவாக்குதல், உலகளாவிய அறிவுப் பரிமாற்றத்திற்கு பங்களிப்பு, இரட்டை மற்றும் கூட்டு பட்டப்படிப்புகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருவழி நகர்வு, தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, எதிர்கால தொழில்நுட்பங்கள் போன்ற  துறைகளில்  இந்தப் பல்கலைக்கழகத்தின் உறுதிப்பாட்டை திரு பிரதான் பாராட்டினார். இந்த ஒத்துழைப்புகள் இரு நாடுகளிலும் உள்ள மாணவர்களிடையே புதுமை மற்றும் தொழில்முனைவை வளர்ப்பதற்கான திறனை அதிகரிக்கும் என்று அவர் கூறினார் வலியுறுத்தினார்.

ஜேஹெச்யூ மற்றும் முன்னணி இந்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இந்த கலந்துரையாடல் அமைந்தது.

திரு. டேனியல்ஸ் மற்றும் குழுவினரின் வருகை இந்திய-அமெரிக்க கல்வி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் பல நகரங்களுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தத் தூதுக்குழு பல்வேறு இந்திய பல்கலைக்கழக வளாகங்களுக்குச் சென்று முக்கிய  அதிகாரிகள், கல்வித் துறையினர், தூதரக பிரதிநிதிகளுடன் இந்தியாவில் ஜேஹெச்யூ நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறது.

 

***

PLM/DL


(Release ID: 2074085) Visitor Counter : 40


Read this release in: English , Urdu , Marathi , Hindi , Odia