நிதி அமைச்சகம்
2024-25-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 11% ஆண்டு வளர்ச்சியுடன் பொதுத்துறை வங்கிகள் வலுவான செயல்திறனைக் காட்டுகின்றன
Posted On:
12 NOV 2024 3:27PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அணுகல் மற்றும் சேவையின் சிறப்பை மேம்படுத்துதல், திவால் மற்றும் நொடித்தல் நிலைமை விதிகள் அமல்படுத்துதல், வலுவான நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல், தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் அமைத்தல் போன்ற முக்கிய வங்கி சீர்திருத்தங்கள், பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் பணி ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்கள், பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளுடன் தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் பிரச்சினைகள் குறித்து விவாதங்களுக்கு வழிவகுத்தன. சீர்திருத்தங்கள் மற்றும் வழக்கமான கண்காணிப்பு பல விவகாரங்கள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்துள்ளன.
பொதுத் துறை வங்கிகளின் மொத்த வணிகம் ரூ.236.04 லட்சம் கோடியாக (11% ஆண்டு வளர்ச்சி) இருந்தது.
உலகளாவிய கடன் மற்றும் வைப்பு முறையே 12.9% மற்றும் 9.5% அதிகரித்து, முறையே ரூ.102.29 லட்சம் கோடி மற்றும் ரூ.133.75 லட்சம் கோடியாக இருந்தது.
2025-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான செயல்பாடு 14.4 சதவீத வளர்ச்சியுடன் ரூ.1,50,023 கோடியாகவும் மற்றும் நிகர லாபம் 25.6% வளர்ச்சியுடன் ரூ.85,520 கோடியாகவும் இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072705
****
(Release ID: 2072705)
IR/KPG/KR
(Release ID: 2072715)
Visitor Counter : 32