மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உயர், தொழில்நுட்பக் கல்விக்கான தேசிய பயிலரங்கை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் செயலாளர்களுடன் இணைந்து திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்
Posted On:
12 NOV 2024 1:44PM by PIB Chennai
உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் செயலாளர்களுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கல்வி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தாரும் கலந்து கொண்டார். உயர்கல்வித் துறை செயலாளர் திரு கே.சஞ்சய் மூர்த்தி, உயர்கல்வித் துறை கூடுதல் செயலாளர் திரு சுனில் குமார் பர்ன்வால், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர், பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார், உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் திருமதி மன்மோகன் கவுர், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் செயலாளர்கள், கல்வியாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பிரதான், பிரதமர் திரு நரேந்திர மோடி நிர்ணயித்த தேசிய முன்னுரிமைகளை அடைவது, வாழ்க்கையை எளிதாக்குவது, தனிநபர் வருமானத்தை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு கல்வி எவ்வாறு கணிசமான முன்னேற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பது குறித்து கல்வி விவாதத்திற்கான தளமாக இந்தப் பயிலரங்கு செயல்படும் என்று கூறினார். தொழில்துறை 4.0 வழங்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், பொருளாதாரத்தை உற்பத்தி செய்யும் நாடாக மாற வேண்டும் என்றும், உலகத் தரத்திற்கும் மேலான கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கல்வியாளர்கள், நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டிய ஐந்து முக்கியப் பகுதிகளை அமைச்சர் பரிந்துரைத்தார். இவை புதுமையான நிதி முறைகள் மூலம் பொதுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்துவது. தொழில்துறையின் தேவைக்கேற்பவும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்பவும் பாடத்திட்டங்களை சீரமைக்கவும் வடிவமைக்கவும் சிந்தனைக் குழுக்களை அமைத்தல், உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தலைமைத்துவத்தை ஏற்பதற்காக ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு பல்துறை அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது புகழ்பெற்ற மத்திய மாநில நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் ஒவ்வொரு மாநிலம் யூனியன் பிரதேசத்திலும் கல்வி தலைமைத்துவ மேம்பாட்டு திட்டங்களை ஊக்குவித்தல், விளையாட்டு, விவாதம், கவிதை, நாடகம், நிகழ்த்து கலைகள் மூலம் கல்வி கற்கும் வாழ்க்கை சூழலில் ஆர்வத்தைப் புதுப்பித்தல் மற்றும் இந்த கல்வி அல்லாத பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
----
(Release ID 2072673)
IR/KPG/KR
(Release ID: 2072682)
Visitor Counter : 41