பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெஸ்ட்ஸ் 5-வது தேசிய கலாச்சார விழா புவனேஸ்வரில் நாளை தொடங்குகிறது- மத்திய அமைச்சர் திரு ஜூவல் ஓரம் பங்கேற்கிறார்

Posted On: 11 NOV 2024 5:00PM by PIB Chennai

பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கத்தின் (NESTS-நெஸ்ட்ஸ்) 5-வது தேசிய  ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளி (EMRS-இஎம்ஆர்எஸ்) கலாச்சார, இலக்கிய விழாவான கலா உத்சவ் - 2024 புவனேஸ்வரில்  நாளை முதல் (2024 நவம்பர் 12), 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளையொட்டி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஜூல் ஓரம், பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் யுகே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆண்டு கலாச்சார விழாக்களின் கருப்பொருள், "பகவான் பிர்சா முண்டாவுக்கும், பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் மரியாதை" என்பதாகும். மேலும் இது பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளுடன் இணைந்து, வரலாற்று, கலாச்சார முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

நாடு முழுவதிலுமிருந்து ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளியில் (EMRSs) படிக்கும் 2,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் பல்வேறு கலாச்சார, இலக்கிய நிகழ்வுகள் மூலம் இந்தியாவின் பழங்குடி சமூகங்களின் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தை இந்த விழாவின் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.

இதில் 35 தனித்துவமான நிகழ்வுகள் இடம்பெறும். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் கலைத் திறன்களை வெளிப்படுத்த முடியும். இந்த கலாச்சார விழாவில் வெற்றி பெறுபவர்கள் போபாலில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072435

-------

PLM/RS/DL


(Release ID: 2072478) Visitor Counter : 36