நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இந்திய உணவுக் கழகமும் மாநில முகமைகளும் பஞ்சாபில் 120.67 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளன
Posted On:
09 NOV 2024 12:01PM by PIB Chennai
2024, நவம்பர் 8 நிலவரப்படி மொத்தம் 126.67 லட்சம் மெட்ரிக் டன் நெல் பஞ்சாப் மண்டிகளுக்கு வந்துள்ளது. இதில் 120.67 லட்சம் மெட்ரிக் டன் நெல் மாநில முகமைகளாலும் இந்திய உணவுக் கழகத்தாலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
முதல் ரக நெல்லுக்கு மத்திய அரசு தீர்மானித்தபடி ஒரு குவிண்டாலுக்கு ரூ .2320 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நெல் வாங்கப்படுகிறது. மேலும் நடப்பு கரிஃப் சந்தைப் பருவம் 2024-25-ல் இன்றுவரை அரசால் கொள்முதல் செய்யப்பட்ட மொத்த நெல்லின் மதிப்பு ரூ .27995 கோடி ஆகும். இது பஞ்சாபில் சுமார் 6.58 லட்சம் விவசாயிகளுக்கு பயனளித்துள்ளது. 4839 ஆலை உரிமையாளர்கள் நெல் அரைவைக்கு விண்ணப்பித்துள்ளனர். 4743 ஆலை உரிமையாளர்களுக்கு பஞ்சாப் மாநில அரசு பணி ஒதுக்கீடு செய்துள்ளது.
கரிஃப் சந்தைப் பருவம் 2024-25 க்கான நெல் கொள்முதல் பஞ்சாபில் 2024, அக்டோபர் 1 முதல் தொடங்கியது. இது 30.11.2024 வரை தொடரும். விவசாயிகளிடமிருந்து சுமூகமாக கொள்முதல் செய்வதற்காக மாநிலம் முழுவதும் 2927 மண்டிகள் மற்றும் தற்காலிக களங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024-25 ஆம் ஆண்டில் 185 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது,.
மண்டிகளில் இருந்து நெல் கொண்டுசெல்லும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. தினசரி வரத்து அளவை விட கொண்டுசெல்லும் நெல் அளவு அதிகமாக உள்ளது. இதனால் நெல் கொள்முதல் சுமூகமாக நடந்து வருகிறது.
******
SMB/KV
(Release ID: 2071983)
Visitor Counter : 43