சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
வணிக நீதிமன்றங்கள் (திருத்த) வரைவு மசோதா, 2024 மீது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன
प्रविष्टि तिथि:
08 NOV 2024 3:26PM by PIB Chennai
வணிகம் தொடர்பான வழக்குகளை விரைவாகவும், திறமையாகவும், குறைந்த செலவிலும் முடிப்பதை உறுதி செய்யும் வகையில், வணிக நீதிமன்றங்கள் சட்டம், 2015-ஐ அரசு இயற்றியது. இச்சட்டம் 2018-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு, நாட்டில் வணிக வழக்குகளில் தீர்வு காண்பதற்கான சூழலை வலுப்படுத்த மத்திய அரசு சட்ட ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வணிக நீதிமன்றங்கள் சட்டம், 2015-ல் மேலும் திருத்தங்கள் செய்வது குறித்து சட்ட விவகாரங்கள் துறை தற்போது பரிசீலித்து வருகிறது.
முன்மொழியப்பட்ட திருத்தங்களின் நோக்கம், வணிக தகராறுகளுக்கு விரைவான தீர்ப்பு வழங்குவதற்கும், நீதிமன்றங்களில் வர்த்தக தகராறு தீர்வு தொடர்பான பொருந்தக்கூடிய நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கும் மேலும் உத்வேகம் அளிப்பதாகும்.
இதைக் கருத்தில் கொண்டு, வணிக நீதிமன்றங்கள் (திருத்தம்) வரைவு மசோதா, 2024 மற்றும் தற்போதுள்ள விதிமுறை மற்றும் முன்மொழியப்பட்ட திருத்தத்தை சித்தரிக்கும் அட்டவணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
வரைவு திருத்தங்கள் மீதான பொது ஆலோசனை பயிற்சியின் ஒரு பகுதியாக பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை துறை வரவேற்கிறது. வரைவு மசோதா மற்றும் அட்டவணை அறிக்கையை https://legalaffairs.gov.in - ல் அணுகலாம். வரைவு மசோதா பற்றிய கருத்துக்களை avnit.singh[at]gov[dot]in மற்றும் ndiac-dla[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் மூலம் 22.11.2024-க்குள் அனுப்பலாம்.
***
(Release ID: 2071745)
PKV/AG/KR
(रिलीज़ आईडी: 2071761)
आगंतुक पटल : 122