தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை குறித்த சிறப்பு இயக்கம் 4.0-ஐ தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

Posted On: 07 NOV 2024 6:57PM by PIB Chennai

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 2024, அக்டோபர் 2 முதல் 31, வரை சிறப்பு இயக்கம் 4.0 ஐ வெற்றிகரமாக மேற்கொண்டது. இது தூய்மையை கடைபிடித்தல், நிலுவைப் பணிகளை குறைத்தல், இடத்தை உகந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட கள அலுவலகங்களில் இந்த இயக்கம் நடத்தப்பட்டது. இயக்கத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிட அமைச்சகத்திலிருந்து அதிகாரிகள் கள அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

  • 64,567 நேரடி கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, 38,774 கோப்புகள் கழிக்கப்பட்டன
  • 2,136 மின்-கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன, 1,331 கோப்புகள் முடிக்கப்பட்டன
  • 391 பொதுமக்களின் குறைத்தொடர்பான மனுக்களுக்கும், 72 மேல்முறையீட்டு மனுக்களுக்கும் தீர்வுகாணப்பட்டது
  • 78,543 கிலோ பழைய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு ரூ.85,99,249 வருவாய் ஈட்டப்பட்டது
  • 866 வெளிப்புற தூய்மை முகாம்கள் நடத்தப்பட்டன
  • தூய்மைப்பணி மூலம் 65,561 சதுர அடி இடம் காலியாக்கப்பட்டது
  • 325 பழைய வாகனங்கள் கண்டறியப்பட்டு , அவற்றில் 30 வாகனங்கள் தகுதி  நீக்கம் செய்யப்பட்டன
  • நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து 33 குறிப்புகள், 1 மாநில அரசு குறிப்பு மற்றும் 1 பிரதமர் அலுவலக குறிப்புக்கு தீர்வு காணப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2071586

***

IR/RS/DL


(Release ID: 2071603) Visitor Counter : 23