பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படை வினாடி வினா திங்க் 2024 -ன் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள்

Posted On: 06 NOV 2024 12:46PM by PIB Chennai

இந்திய கடற்படையின் மெகா வினாடி வினா போட்டியான திங்க் 2024 -ன் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் (INA) நடத்த இந்திய கடற்படை தயாராக உள்ளது.  ஜூலை 15 அன்று பதிவு செயல்முறையுடன் தனது பயணத்தைத் தொடங்கிய திங்க்-24, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கருப்பொருளுடன் இணைந்த இந்த போட்டி, அறிவை வளர்ப்பதுடன் இளம் மனதை மேம்படுத்தும் மிகப்பெரிய தேசிய வினாடி வினா போட்டியாக வளர்ந்துள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்காக நாடு முழுவதிலுமிருந்து வினாடி வினா போட்டியின் அரையிறுதிப் போட்டியாளர்கள் வந்துள்ளதால், இந்தியக் கடற்படை அகாடமி உற்சாகத்துடன் பரபரப்பாக உள்ளது. கடுமையான மண்டல போட்டிகளைத் தொடர்ந்து, கல்வியில் சிறந்து விளங்கும் 16 பள்ளிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. போட்டிக்காக, வந்திறங்கிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அகாடமியில் தங்கியிருக்கும் காலத்தில், இந்தப் பிரகாசமான இளம் மனங்கள் இந்திய கடற்படையின் அதிநவீன பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் பார்வையிடும் தனித்துவமான வாய்ப்பைப் பெறுவார்கள். அணிகள் அறிவின் உற்சாகமான போட்டியில் ஈடுபடத் தயாராகி வரும் நிலையில், பங்கேற்பாளர்கள் அத்தகைய புகழ்பெற்ற இடத்தில் போட்டியிடுவதில் தங்கள் மனக் கிளர்ச்சியையும் சிறப்புரிமைகளையும் வெளிப்படுத்தினர். இந்த இளம் மேதைகள் விடாமுயற்சியுடன் தயாராகி வருகின்றனர், அறிவு மற்றும் குழுப்பணியின் உயிரோட்டமான பரிமாற்றத்தை எதிர்பார்த்து வருகின்றனர்

இதில் பங்கேற்கும் 16 அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டியில் தெற்கு கடற்படை தளத்தின் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.  16 அணிகளில், 08 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.  நவம்பர் 8 அன்று கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி முன்னிலையில் இறுதிப்போட்டி நடைபெறும்.  இது மாணவர்களின் கல்விப் பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல்லாக இருக்கும்.

திங்க் 2024 போட்டி, பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த சகாக்களுடன் மாணவர்கள் இணைவதற்கும், இந்திய கடற்படையின் வளமான கடல்சார் பாரம்பரியத்தைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுவதற்கும் ஒரு தளமாகும். போட்டியின் இறுதி பயணத்தைத் தொடங்கும்போது பங்கேற்கும் அனைத்து பள்ளி அணிகளுக்கும் இந்திய கடற்படை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

***

TS/PKV/KV/KR
(Release ID: 2071082)

 

 




(Release ID: 2071098) Visitor Counter : 33


Read this release in: English , Urdu , Hindi , Telugu