நித்தி ஆயோக்
15 நாள் நீர்த் திருவிழா நாளை தொடங்குகிறது
Posted On:
05 NOV 2024 2:49PM by PIB Chennai
நீர் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் உணர்திறனை மக்களிடையே உருவாக்குவதற்காக நிதி ஆயோக், நாளை முதல் 15 நாள் நீர்த் திருவிழாவைத்' தொடங்குகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 3-வது தலைமைச் செயலாளர்கள் மாநாட்டின் போது 'நதி உற்சவம்' என்ற யோசனையை முன்வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி இந்தப் பிரச்சாரத் திருவிழா மேற்கொள்ளப்படுகிறது.
ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் தேசிய ஜல் ஜீவன் இயக்கத்துடன் இணைந்து நவம்பர் 6-24, 2024 வரை 20 ஆர்வமுள்ள மாவட்டங்கள், வட்டாரங்களில் ஜல் உத்சவ் செயல்படுத்தப்படுகிறது. 20 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த திருவிழா, நீர்வளங்களைப் பாதுகாக்கும், சமுதாயப் பங்களிப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது. வீடுகளிடையே திறம்பட நீரைப் பயன்படுத்தல் மற்றும் ஏஜென்சிகளிடையே நீர் மேலாண்மை குறித்த பொறுப்புணர்வை ஏற்படுத்த இது முயல்கிறது. இந்த முயற்சியில், பள்ளி மாணவர்கள் நீர் மேலாண்மை நடவடிக்கைகளில் சேர்க்கப்படுகிறார்கள். இது அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் மாற்றத்திற்கான கிரியா ஊக்கிகளாக அவர்கள் செயல்பட அதிகாரம் அளிக்கிறது.
பதினைந்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் கலந்து கொள்ளும் 'ஜல் பந்தன்' தொடங்கப்படும். அவர்கள் அந்தந்த தொகுதிகள் மற்றும் மாவட்டங்களின் நீர் சொத்துக்கள் குறித்த உண்மை அறிக்கையை வெளியிடுவார்கள். மேலும், பதினைந்து நாட்களில் துறை நடவடிக்கைகளுக்கான திட்டம் குறித்து விவாதிப்பதுடன், நியாயமான மற்றும் நிலையான பயன்பாட்டை உறுதி செய்யும் நீர்வளங்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
இந்த விழாவின் பதினைந்து நாட்களில் நீர் நிலைகளை சுத்தம் செய்வதும் அடங்கும். நீர்நிலைகளைப் பார்வையிடுவதன் மூலம் நீர் மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களை ஊக்குவித்தல் மற்றும் கள சோதனை கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு நீர் தரப் பரிசோதனை மேற்கொள்ள பயிற்சி அளித்தல் ஆகிய செயல்கள் மூலம் நீர் மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஆஷா பணியாளர்களும் இந்த விழாவில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.
நீர் வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாணவர்கள், வீடுகள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடமும் பொறுப்புணர்வை வளர்ப்பதன் மூலம் தண்ணீரை வாழ்க்கைக்கு ஒரு முக்கிய அங்கமாகக் கொண்டாடுவதை ஜல் உத்சவ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
----
TS/PKV/KPG/KR/DL
(Release ID: 2070946)
Visitor Counter : 36