விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை 2024-25 ஆம் ஆண்டிற்கான முக்கிய வேளாண் பயிர்களின் (காரீஃப் பருவம் மட்டும்) முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது

Posted On: 05 NOV 2024 3:34PM by PIB Chennai

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 2024-25 ஆம் ஆண்டிற்கான முக்கிய வேளாண் பயிர்களின் (காரீஃப் பருவம் மட்டும்) உற்பத்தி குறித்த முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.

தொலையுணர்வு, வாராந்திர பயிர் வானிலை கண்காணிப்புக் குழு மற்றும் பிற முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட பயிர் பரப்பு சரிபார்க்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. மேலும், நடப்பு காரீப் பருவத்திற்கான கருத்துகள், பார்வைகள் மற்றும் உணர்வு மனப்பான்மை பெறுவதற்காக தொழில்துறை மற்றும் பிற அரசுத் துறைகளின் பிரதிநிதிகளுடன் பங்குதாரர்களின் ஆலோசனையின் முன்முயற்சியை அமைச்சகம்  மேற்கொண்டது. மதிப்பீடுகளை இறுதி செய்யும்போது இவையும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

முதன்முறையாக, மாநில அரசுகளுடன் இணைந்து டிஜிட்டல் வேளாண் இயக்கத்தின் கீழ் நடத்தப்படும் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு (டி.சி.எஸ்) தரவுகள் பகுதி மதிப்பீடுகளைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.

முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கான மொத்த காரீப் உணவு தானிய உற்பத்தி 1647.05 லட்சம் மெட்ரிக் டன்களாக (எல்எம்டி) இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு காரீப் உணவு தானிய உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 89.37 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும். மேலும் சராசரி காரீப் உணவு தானிய உற்பத்தியை விட 124.59 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும். அரிசி, சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றின் கூடுதலான உற்பத்தி காரணமாக உணவு தானிய உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் காரீப் அரிசியின் மொத்த உற்பத்தி 1199.34 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு காரீப் அரிசி உற்பத்தியை விட 66.75 லட்சம் மெட்ரிக் டன்  அதிகமாகவும், சராசரி காரீப் அரிசி உற்பத்தியை விட 114.83 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகவும் உள்ளது. காரீப் மக்காச்சோளம் உற்பத்தி 245.41 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் காரீப் ஊட்டச்சத்தான  அரிசி , கோதுமை நீங்கலாக ஏனைய தானியங்கள் 378.18 லட்சம் மெட்ரிக் டன்  என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024-25 ஆம் ஆண்டில் மொத்த காரீப் பருப்பு உற்பத்தி 69.54 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்த காரீப் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 257.45 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டின் மொத்த காரீப் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை விட 15.83 லட்சம் மெட்ரிக் டன்  அதிகமாகும். 2024-25 ஆம் ஆண்டில் காரீப் நிலக்கடலை உற்பத்தி 103.60 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் சோயாபீன் உற்பத்தி 133.60 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் நாட்டில் கரும்பு உற்பத்தி 4399.30 லட்சம் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. பருத்தி உற்பத்தி 299.26 லட்சம் பேல்கள் (தலா 170 கிலோ) என மதிப்பிடப்பட்டுள்ளது. சணல் மற்றும் நார் நிறைந்த புளிச்சக்கீரை உற்பத்தி 84.56 லட்சம் பேல்கள் (ஒவ்வொன்றும் 180 கிலோ) என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2070834

-----

TS/PKV/KPG/DL




(Release ID: 2070941) Visitor Counter : 15